தவால் குல்கர்னி
2021 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி, 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 50 லட்ச ரூபாய் ஆரம்ப விலைக்கு தன்னுடைய பெயரை பதிவு செய்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக எந்த அணியும் இவரை தேர்ந்தெடுப்பதற்கு முன் வரவில்லை.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா இடம்பெறவில்லை என்பதால் அவருக்கு பதில் குல்கர்னியை தேர்வு செய்யலாம் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் இவருக்கு உள்ளது என்றும் முன்னாள் வீரர்கள் பல அறிவுரை கொடுத்து வருகின்றனர்.