காயத்தால் விலகிய கைல் ஜேமிசன்,சென்னை அணி டார்கெட் செய்திருக்கும் 3 வீரர்கள்..
2023 ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியில் ஒரு கோடி ரூபாய் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கைல் ஜெமிசன்., எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு ஏற்கனவே ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததால் நாலு மாதத்திற்கு மேல் எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் விளையாட கூடாது என மருத்துவர்கள் கூறிவிட்டதால் அவர் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிய வந்துள்ளது.
குறைந்த விலையில் நல்ல ஆல்ரவுண்டரை தேர்ந்தெடுத்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த சென்னை அணி, தற்பொழுது கையில் ஜெமிசனுக்கு பதில் வேற ஒரு வீரரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டத்தில் தள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் கையில் ஜேமிசனுக்கு பதில் சென்னையில் தேர்ந்தெடுக்க திட்டமிட்டு இருக்கும் மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
கிறிஸ் ஜோர்டன்
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் கிரிஸ் ஜோர்டன்., 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏழத்தில் விலை போகவில்லை.
ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடிய அனுபவம் இருப்பதாலும் கைல் ஜெமிசனுக்கு பதில் இவர் ஒரு நல்ல தீர்வாக இருப்பதாலும் இவரை சென்னை அணி தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.