ஐபிஎல் ஏலம் 2023; இங்கிலாந்து வீரர் கிராய்க் ஓவர்டனை தட்டி தூக்க காத்திருக்கும் மூன்று அணிகள்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் கிரெய்க் ஓவர்டன்னை எப்படியாவது தனது அணியில் இணைக்க வேண்டும் என காத்திருக்கும் 3 அணிகள் குறித்து இங்கு காண்போம்.
சர்வதேச இங்கிலாந்து அணியில் போதுமான இடம் கிடைக்கவில்லை என்றாலும் டி20 தொடரில் தன்னுடைய அபாரமான வேகம் மற்றும் சிறப்பான பேட்டிங்கில் அதிக அனுபவத்தை பெற்றுள்ள இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிரெய்க் ஓவர்டன், 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏழத்தில் தன்னுடைய பெயரை 2 கோடி ரூபாய் ஆரம்ப விலையாக பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கிரெய்க் ஓவர்டன்னை தனது அணியில் இணைப்பதற்கு சில அணிகள் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட 3 அணிகள் குறித்து இங்கு காண்போம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏற்கனவே புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக் மற்றும் டி நடராஜன் உட்பட சிறப்பான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இருந்த போதும் ஓவர்சீஸ் பிளேயரான ஒரு வேகப்பந்துவீச்சாளரை அணியில் இணைப்பதற்கான திட்டம் ஹைதராபாத் அணியில் இருப்பதாக தெரிகிறது.
இதனால் ஹைதராபாத் அணி இங்கிலாந்து வழியில் நட்சத்திர பந்துவீச்சாளர் கிரெய்க் ஓவர்டன்னை தனது அணி இணைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. கிரெய்க் ஓவர்டன் வந்து வீச்சில் மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் ஹைதராபாத் அணிக்கு இவர் நல்ல தேர்வாக அமையலாம்.