மும்பை இண்டியன்ஸ் பேட்டிங்... பும்ரா இல்லாமலே கடப்பாரை அணிதான்யா இது.. எதிர்பார்த்த வீரர் பிளேயிங் லெவனில் வருகிறார்... ஆர்சிபி சமாளிக்குமா? 1

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பவுலிங் செய்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. எதிர்பார்த்த இரண்டு மும்பை வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

2023 ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் பலம்மிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுவதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மீது எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது.

மும்பை இண்டியன்ஸ் பேட்டிங்... பும்ரா இல்லாமலே கடப்பாரை அணிதான்யா இது.. எதிர்பார்த்த வீரர் பிளேயிங் லெவனில் வருகிறார்... ஆர்சிபி சமாளிக்குமா? 2

இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டூ ப்ளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. ஜோப்ரா ஆர்ச்சர் இருப்பாரா? மாட்டாரா? என்று சந்தேகங்கள் எழுந்துவந்த நிலையில், அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார் என்று தெரிவித்தார் ரோகித் சர்மா.

இன்றைய போட்டியில் டிம் டேவிட், கேமரா கிரீன் மற்றும் ஜோப்ரா ஆர்சர் ஆகிய மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்குகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. பிரேஸ்வெல், மேக்ஸ்வெல், டாப்லி மற்றும் டூ பிளேஸிஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

மும்பை இண்டியன்ஸ் பேட்டிங்... பும்ரா இல்லாமலே கடப்பாரை அணிதான்யா இது.. எதிர்பார்த்த வீரர் பிளேயிங் லெவனில் வருகிறார்... ஆர்சிபி சமாளிக்குமா? 3

மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன்:

ரோகித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ரித்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பிளேயிங் லெவன:

மும்பை இண்டியன்ஸ் பேட்டிங்... பும்ரா இல்லாமலே கடப்பாரை அணிதான்யா இது.. எதிர்பார்த்த வீரர் பிளேயிங் லெவனில் வருகிறார்... ஆர்சிபி சமாளிக்குமா? 4

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), கர்ண் ஷர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ்

மும்பை இம்பாக்ட் வீரர்கள்

ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், விஷ்ணு வினோத், ஷம்ஸ் முலானி, சந்தீப் வாரியர், ராமன்தீப் சிங்

ஆர்சிபி இம்பாக்ட் வீரர்கள்

அனுஜ் ராவத், சுயாஷ் பிரபுதேசாய், மஹிபால் லோம்ரோர், சோனு யாதவ், டேவிட் வில்லி

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *