2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. இத்தொடர் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார் மகேந்திர சிங் தோனி. ஆனால் முதல் 8 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே சென்னை அணி பெற்றது. இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார் ஜடேஜா. பின்னர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜடேஜா தெரிவித்தார். இதனை அடுத்து தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அதன் பிறகு ஜடேஜா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இடையே பல கருத்து வேறுபாடுகள் நிலவி இருப்பதாக தெரிகிறது. நடுவில் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சார்ந்த பதிவுகள் அனைத்தையும் நீக்கினார். இதன் அடிப்படையில் பலரும் ஜடேஜா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு தரப்பும் விரைவில் பிரிவை சந்திக்க இருக்கின்றன என்ற தகவல்கள் வெளியாகியது.
மேலும் சமீபத்தில் வெளியான தகவலின் படி, குஜராத் டைட்டன்ஸ் அணியை அணுகி சுப்மன் கில்லை கொடுத்துவிட்டு வேறொரு சிஎஸ்கே வீரரை பெற்றுக் கொள்ள முடியுமா? என்று ஆவணங்களை சமர்ப்பித்து இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதற்கு குஜராத் அணி நிர்வாகம் ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் பினிஷிங் ரோலில் விளையாடும் ராகுல் திவாட்டியா மற்றும் சாய் கிஷோர் இருவருக்கும் பதிலாக, இந்த சிஎஸ்கே வீரர்களை வைத்துக் கொள்ள முடியுமா? என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் குஜராத் நிர்வாகத்தை அணுகியுள்ளது. இதற்கும் குஜராத் அணி நிர்வாகம் மறுத்துள்ளது. அந்த வீரர் ஜடேஜாவாக இருப்பார் என்ற பல யூகங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
வருகிற டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் ஜடேஜா பங்கே இருக்கிறார் என்ற மற்றொருபுற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக சிறிய அளவிலான ஏலத்தை பிசிசிஐ நடத்துகிறது. அந்த ஏலத்தில் பங்கேற்பதற்கான ஆவணங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சமர்ப்பித்து இருக்கிறது. ஆவணத்தில் இருந்து கசிந்த தகவல்களின்படி, ஜடேஜா ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கிறார், இனி சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளனர்.