எங்க கிட்டயும் சீப்பு இருக்கு... 1 ரன்னில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; சரியான நேரம் பார்த்து வன்மத்தை வெளிப்படுத்திய கவுதம் கம்பீர் !! 1
எங்க கிட்டயும் சீப்பு இருக்கு… 1 ரன்னில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; சரியான நேரம் பார்த்து வன்மத்தை வெளிப்படுத்திய கவுதம் கம்பீர்

பெங்களூர் – மும்பை இடையேயான போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றிய பெஹண்ட்ரூஃபை, முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளது சமூக வலைதளங்களில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளே பரம எதிரிகளாக பார்க்கப்பட்டு வந்தது. ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ என ரசிகர்களால் பேசப்படும் அளவிற்கு மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான ஒவ்வொரு போட்டியும் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் நடைபெறும். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ – பெங்களூர் இடையேயான இரண்டு போட்டிகள் மற்ற அனைத்து போட்டிகளையும் விட பரபரப்பாக நடைபெற்று, ஐபிஎல் தொடரில் இரண்டு புது எதிரிகளை உருவாக்கியது.

எங்க கிட்டயும் சீப்பு இருக்கு... 1 ரன்னில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; சரியான நேரம் பார்த்து வன்மத்தை வெளிப்படுத்திய கவுதம் கம்பீர் !! 2

பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி பந்து வரை போராடி லக்னோ அணி வெற்றி பெற்றதால், லக்னோ வீரர்கள் இந்த வெற்றியை மிகுந்த ஆவேசத்துடன் கொண்டாடினர். குறிப்பாக ஆவேஸ் கானும், கவுதம் கம்பீர் அதிக ஆவேசத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் கடுப்பான விராட் கோலி, லக்னோ அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தனி ஆளாக லக்னோ வீரர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார். போட்டியின் இறுதி வரை விராட் கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டதால், விராட் கோலி – கவுதம் கம்பீர் இடையே கடும் வாக்குவாதமே ஏற்பட்டது.

எங்க கிட்டயும் சீப்பு இருக்கு... 1 ரன்னில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; சரியான நேரம் பார்த்து வன்மத்தை வெளிப்படுத்திய கவுதம் கம்பீர் !! 3

இதனை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற குஜராத் – லக்னோ இடையேயான போட்டியில், பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்ட குஜராத் அணியின் விர்திமான் சஹாவையும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ரசீத் கானையும் விராட் கோலி தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலம் பாராட்டினார். கவுதம் கம்பீரை வம்பிழுப்பதற்காகவும், லக்னோ அணி மீதான தனது கோவத்தை வெளிப்படுத்துவதற்காகவுமே விராட் கோலி இன்ஸ்டாகிராமில் குஜராத் வீரர்களை பாராட்டியதாக பார்கப்படும் நிலையில், தற்போது கவுதம் கம்பீரும் விராட் கோலியின் வழியை பின்பற்றியே தனது வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எங்க கிட்டயும் சீப்பு இருக்கு... 1 ரன்னில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; சரியான நேரம் பார்த்து வன்மத்தை வெளிப்படுத்திய கவுதம் கம்பீர் !! 4

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 1 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதற்காகவே காத்திருந்த கவுதம் கம்பீர், விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றிய மும்பை வீரர் பெஹண்ட்ரூஃபின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதில் “what a player” என விராட் கோலி பயன்படுத்திய அதே வார்த்தைகளையும் பதிவிட்டுள்ளார். கவுதம் கம்பீரின்  இந்த இன்ஸ்டா பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது கம்பீர் மற்றும் விராட் கோலி ரசிகர்கள் இடையே புதிய சண்டையையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *