அவரு இல்லேன்னாலும் நம்மோட கேப்டன் ரிஷப் பண்ட் தான் ; ரிஷப் பண்ட் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசிய ரிக்கி பாண்டிங்..
டெல்லி அணியில் இருக்கும் எல்லாருக்கும் எப்பொழுதுமே ரிஷப் பண்ட் தான் கேப்டன் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார.
கடந்த டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் பலத்த காயம் ஏற்பட்டு ஒரு வருட காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் கூறிவிட்டதால், எதிர்வரும் ஐபிஎல் தொடர் உலக கோப்பை தொடர் என எதிலும் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியது.

இதனால் 2023 ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிடல் அணியை ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் வழி நடத்துவார் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
ஆனால் இந்த அறிவிப்பு ரிஷப் பண்டின் கிரிக்கெட் எதிர்காலத்தை பாதிக்குமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்திருந்தது.. ஏனென்றால் இதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்., தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்தபோது அவருடைய கேப்டன் பதவியை ரிஷப் பண்டிடம் ஒப்படைத்துவிட்டு அவரையே நிரந்தர கேப்டனாக டெல்லி அணி நியமித்து ஷ்ரேயாஸ் ஐயரை அணியிலிருந்து நீக்கியது.

இதனால் இது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் டெல்லி அணியில் நடைபெறுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்று முன்னாள் வீரர்கள் சிலர் விவாதித்து வந்தனர்.
இந்த நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிர்ச்சியாளர் ரிக்கி பாண்டிங்., டெல்லி அணியில் ரிஷப் பன்ட் இல்லை என்றாலும் அவர் நம்முடைய கேப்டன் என்று டெல்லி அணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரிடமும் தெரிவித்திருந்தது செய்தியாளர்களுக்கு செய்தியாக கிடைத்துள்ளது.

ரிஷப் பண்ட் குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில்,“இந்த ஐபிஎல் உலகில் ஒவ்வொரு போட்டியிலும் ரிஷப் பண்ட் எனக்கு அருகில் இருப்பார். ஆனால் இந்த வருடம் அந்த வாய்ப்பு அமையாது என்பது உங்களுக்கு தெரியும், இதனால் அவரை எந்த வகையிலாவது நாம் அணியுடன் சேர்ந்து கொண்டு செல்ல வேண்டும். அவருடைய ஜெர்சி நம்பரை நம்முடைய ஜெர்சியிலோ அல்லது தொப்பியிலோ வைத்து அவரை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் அனைவருக்கும் நான் சொல்ல வருவது என்னவென்றால், அவர் தற்பொழுது அணியில் நம்முடன் இல்லை என்றாலும் அவர்தான் நமக்கான கேப்டன்” என்று ரிக்கி பாண்டிங் உருக்கமாக ரிஷப் பண்ட் குறித்து தெரிவித்திருந்தார்.

ரிக்கி பாண்டிங் மற்றும் ரிஷப் ஆகிய இருவருக்கும் இருக்கும் குரு சிஷ்யனுக்கு உறவு தற்பொழுது இந்திய கிரிக்கெட் வட்டத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் வட்டத்திலும் பேசு பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.