காசுக்காக ஐபிஎல் டீம்ல ஆடுறீங்க.. அதை விட நாட்டுக்காக ஆடுங்க; அது தான் நமக்கு முக்கியம் - கௌதம் கம்பீர் தரமான பேச்சு! 1

ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதே இந்திய அணியில் இடம்பிடித்து ஆடுவதற்கு தான், இந்திய அணிக்குள் ஏற்கனவே இருப்பவர்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. 13 வது உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. நான்காவது முறையாக உலக கோப்பையை நடத்துகிறது இந்திய நிர்வாகம்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்திய அணி ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பையை வெல்லவில்லை என்கிற குறையை இந்தாண்டு தீர்க்க வேண்டும் என பிசிசிஐ பலவிதமான திட்டங்களில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே இறங்கியுள்ளது.

காசுக்காக ஐபிஎல் டீம்ல ஆடுறீங்க.. அதை விட நாட்டுக்காக ஆடுங்க; அது தான் நமக்கு முக்கியம் - கௌதம் கம்பீர் தரமான பேச்சு! 2

அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், 20 வீரர்கள் கொண்ட பட்டியல் தயாராகிறது. இந்த வருடம் முழுவதும் ஒருநாள் போட்டிகளில் அவர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவார்கள். அதில் யாராவது ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே மற்றொரு வீரர் வருவதற்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டது.

மேலும், இந்த 20 வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பொழுது, அவர்களது பணிச்சுமை கவனிக்கப்படும். தேவை ஏற்பட்டால் உடனடியாக ஐபிஎல் அணியில் இருந்து வெளியேறும் படியும் பிசிசிஐ அறிவுறுத்தும். இதற்கு ஐபிஎல் அணிகள் கட்டாயம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் பிசிசிஐ தெரிவித்திருந்தது.

ஐபிஎல் போட்டிகளில் ஆடும்போது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுவிடுகிறது. அடுத்த சில மாதங்கள் விளையாட முடியவில்லை. அந்த சமயத்தில் இந்திய அணி பின்னடைவை சந்திக்கிறது.

காசுக்காக ஐபிஎல் டீம்ல ஆடுறீங்க.. அதை விட நாட்டுக்காக ஆடுங்க; அது தான் நமக்கு முக்கியம் - கௌதம் கம்பீர் தரமான பேச்சு! 3

உதாரணமாக கடந்த காலங்களில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, தீபக் சஹர் போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளின்போது காயம் அடைந்துள்ளனர். ஆகையால் இந்திய அணியில் விளையாட முடியாமல் போயிருக்கிறது. டி20 உலககோப்பையில் பின்னடைவையும் சந்தித்துள்ளோம். இதை தவிர்ப்பதற்கு இந்த முன்னேற்பாடுகளை பிசிசிஐ செய்து வருகிறது.

பிசிசிஐ-இன் இந்த செயல்பாட்டை வரவேற்று பெருமிதமாக பேசியிருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர். அவர் பேசுகையில்,

“ஐபிஎல் போட்டிகள் என்பது பிசிசிஐ-இன் ஒரு அங்கம். இந்திய அணித்தான் முதன்மையானது. இந்திய அணியின் முன்னணி வீரரை பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி சிறிது காலம் ஓய்வெடுங்கள் என்று கூறினால் வீரர் அதை தான் செய்ய வேண்டும். அந்த தருணத்தில் ஐபிஎல் அணிகள் பாதிப்பிற்கு உள்ளானால், அந்த பாதிப்பை அவர்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பும்ரா சமி

பிசிசிஐக்கு தனது முன்னணி வீரர்கள் வருடம் முழுவதும் மிகவும் முக்கியம். ஆனால் ஐபிஎல் அணிகளுக்கு அப்படி அல்ல. அந்த குறிப்பிட்ட காலங்கள் விளையாடிவிட்டால் போதுமானது என இருந்து விடுவார்கள்.

உலகக்கோப்பை என்பது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும். ஐபிஎல் போட்டிகள் அப்படி அல்ல. ஒவ்வொரு வருடமும் வரும். இந்த வருடம் இல்லை என்றால், அடுத்த வருடம் ஐபிஎல் அணிக்கு சென்று விளையாடிக் கொள்ளலாம்.

ஐபிஎல் அணிகளை விட இந்திய அணிக்கு வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஐபிஎல் கோப்பையை விட உலகக்கோப்பை தான் இந்தியாவிற்கு பெருமை.” என்று கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்தார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *