இந்த 2 பேர் அணியில் இருந்தால் கொல்கத்தா அணியின் ஆட்டமே வேரமாதிரி இருக்கும் ; மனம் திறந்து பேசிய கௌதம் கம்பீர்..
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இந்த இரண்டு வீரர்கள் இருந்திருந்தால் அணியின் நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
என்னதான் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் கௌதம் கம்பீர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவர் லிமிடெட் அவர் போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை அனைவருமே ஒப்புக் கொள்வார்கள், அந்த அளவிற்கு இவர் மிகச்சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்காக கொடுத்துள்ளார்.
2007,2011 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி இடம் பெற்ற கௌதம் கம்பீர் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிகச்சிறந்த பங்காற்றினார் என்பதை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
பேட்டிங்கில் மட்டுமில்லாமல் ஒரு கேப்டனாகவும் செயல்பட்ட கௌதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் தன்னுடைய தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு தொடர்களில் டைட்டில் பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார்.
தற்பொழுது வருணனையாளராகவும் கிரிக்கெட் விமர்சகராகவும், பயிற்சியாளராகவும் , ஆலோசகராகவும் திகழும் கௌதம் கம்பீர்., கிரிக்கெட் சம்பந்தமான தன்னுடைய பார்வையை செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக அடிக்கடி தெரியப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கௌதம் கம்பீரிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரண்டு சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றால் நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த காம்பீர்., “இது மிகவும் கடுமையான கேள்வியாகும் ஆனால் அதற்கு எளிதான பதிலை கொடுத்து விடலாம். வெறும் இரண்டு வீரர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் எளிதாக ரோகித் சர்மா மற்றும் யுவராஜ் சிங்கை தேர்வு செய்வேன். இந்த இரண்டு வீரர்கள் இல்லாததால் கொல்கத்தா அணி சிறந்த அணி இல்லை என்று விடாது, இவர்கள் இருந்தால் கொல்கத்தா அணி அதிகமான போட்டிகளை வெற்றி பெற்றிருக்கும் அதிகமான டைட்டில் பட்டத்தையும் வென்றிருப்போம்.
இவர்கள் அணியில் இருந்திருந்தால் ரோகித் சர்மாவும் நானும் துவக்க வீரராக செயல்பட்டிருப்போம், மூன்றாவது மற்றும் நான்காவது பேட்டிங் ஆர்டரில் ராபின் உத்தப்பா சூரியகுமார் யாதவை களமிறக்கி இருப்போம். ஐந்தாவது இடத்தில் யுவராஜ் சிங்கும் ஆறாவது இடத்தில் யூசுப் பதானும், ஏழாவது இடத்தில் ரசலையும் விளையாட வைத்திருப்போம். நீங்கள் இந்த அணியை நினைத்துப் பார்த்தால் அணியின் தாக்கம் என்ன என்பது தெரிந்து கொள்ளலாம். அந்த சமயத்தில் நாங்கள் யுவராஜ் சிங்கை அணியில் இணைப்பதற்காக கடுமையாக போராடினோம் ஆனால் அது நடக்கவே இல்லை என்று கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.