இதுக்கு மேல மோசமா விளையாடவே முடியாது… ஈசியா ஜெயிக்க வேண்டிய போட்டியில் மட்டமான தோல்வியை சந்தித்தது ஹைதராபாத்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா 34 ரன்கள் எடுத்தனர்.
இதன்பின் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இலக்கை இலகுவாக எட்ட வேண்டும் என்றே என்னமே இல்லாதது போல், ஆமை வேக பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
மாயன்க் அகர்வால் 49 ரன்களும், சற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் க்ளாசன் 31 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய முகேஷ் குமார் அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுகொத்ததால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி, ஈசியாக ஜெயிக்க வேண்டிய போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக அன்ரிச் நோர்கியா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.