பந்துவீச்சில் மாஸ் காட்டிய சென்னை வீரர்கள்... மும்பை அணியின் மானம் காத்த வதேரா; சென்னை அணிக்கு எளிய இலக்கு !! 1
பந்துவீச்சில் மாஸ் காட்டிய சென்னை வீரர்கள்… மும்பை அணியின் மானம் காத்த வதேரா; சென்னை அணிக்கு எளிய இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பந்துவீச்சில் மாஸ் காட்டிய சென்னை வீரர்கள்... மும்பை அணியின் மானம் காத்த வதேரா; சென்னை அணிக்கு எளிய இலக்கு !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேமிரான் க்ரீன் 6 ரன்னிலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரோஹித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார்.

பந்துவீச்சில் மாஸ் காட்டிய சென்னை வீரர்கள்... மும்பை அணியின் மானம் காத்த வதேரா; சென்னை அணிக்கு எளிய இலக்கு !! 3

அடுத்ததாக களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் (26), ஸ்டப்ஸ் (20) ஆகியோர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.  நீண்ட நேரம் தனி ஆளாக போராடி மும்பை இந்தியன்ஸ் அணியின் மானத்தை காத்த இளம் வீரர் நேஹல் வதேரா 51 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் கடைசி நேரத்தில் பதிரானாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

பந்துவீச்சில் மாஸ் காட்டிய சென்னை வீரர்கள்... மும்பை அணியின் மானம் காத்த வதேரா; சென்னை அணிக்கு எளிய இலக்கு !! 4

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பதிரானா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் தீபக் சாஹர் மற்றும் துசார் தேஸ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *