இதுக்குமேல ஒரு வீராரல என்ன செய்ய முடியும் ; ஹைதராபாத் அணி செய்த அநியாயத்தை வெளியே சொன்ன முன்னாள் SRH வீரர் !! 1
இதுக்குமேல ஒரு வீராரல என்ன செய்ய முடியும் ; ஹைதராபாத் அணி செய்த அநியாயத்தை வெளியே சொன்ன முன்னாள் SRH வீரர்..

எந்த காரணத்துக்காக எங்களை அணியிலிருந்து நீக்கினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் முகமது நபி தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முகமது நபி, 2021 ஐபிஎல் தொடர் வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய அங்கமாக செயல்பட்டு பல வெற்றிகளை தனது அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.அப்படியிருந்தும் யாரும் எதிர்பாராத விதம் 2022 ஐபிஎல் தொடருக்கான தனது அணியில் இருந்து ஹைதராபாத் அணி முகமது நபியை நீக்கியது.

இதுக்குமேல ஒரு வீராரல என்ன செய்ய முடியும் ; ஹைதராபாத் அணி செய்த அநியாயத்தை வெளியே சொன்ன முன்னாள் SRH வீரர் !! 2

இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முகமது நபியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது அணியில் இணைத்துக் கொண்டது.ஆனால் இவர் 2022 ஐபிஎல் தொடரில் பங்கு கொள்ளாத காரணத்தினால் 2023 ஐபிஎல் தொடருக்கான தனது அணியிலிருந்து கொல்கத்தா அணி வரை விடுவித்திருந்தது.

இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலப்த்தில் ஒரு கோடி ரூபாயை ஆரம்ப விலையாக நிர்ணயித்த முகமது நபியை ஏதாவது ஒரு அணி நிச்சயம் தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் இவரை எந்த அணியும் தேர்ந்தெடுக்கவில்லை.

இதுக்குமேல ஒரு வீராரல என்ன செய்ய முடியும் ; ஹைதராபாத் அணி செய்த அநியாயத்தை வெளியே சொன்ன முன்னாள் SRH வீரர் !! 3

ஏலம் முடிந்து சில நாட்களுக்கு பிறகு ஐபிஎல் தொடர் குறித்து மனம் திறந்து பேசிய முகமது நபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் செயல்பாட்டை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என ஹைதராபாத் அணி குறித்து குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து முகமது நபி பேசுகையில்,“நாங்கள்(முகமது நபி மற்றும் ரஷீத் கான்) 2017 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தேர்வான பொழுது முதல் மூன்று வருடம் மிக சிறந்த முறையில் விளையாடினோம், அப்பொழுது அணியின் காம்பினேஷனும் அணியுடைய பெர்ஃபார்மன்சும் மிகச் சிறப்பாக இருந்தது, ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் ஹைதராபாத் அணிக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. யார் செய்தார்கள்..? எதற்காக செய்தார்கள் என எதுவும் புரியவில்லை. அனைத்துமே மாறிவிட்டது, அணியின் நிலை மற்றும் பயிற்சியாளர்கள் அணியில் உள்ளவர்கள் என எல்லாம் மாறியுள்ளது.

இதுக்குமேல ஒரு வீராரல என்ன செய்ய முடியும் ; ஹைதராபாத் அணி செய்த அநியாயத்தை வெளியே சொன்ன முன்னாள் SRH வீரர் !! 4

ஹைதராபாத் அணியை நிர்வகிப்பவர்கள் அணியை கட்டமைப்பதற்கு பதிலாக அணியை உடைத்து விட்டார்கள், அணியில் கடுமையான மாற்றங்கள் செய்வதற்கு பதிலாக அணியை பலம் வாய்ந்த அணியாக மாற்றியிருக்கலாம், ரஷித் கான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முகமாக ஐந்து வருடம் திகழ்ந்தார். ஆனால் அவர் அணியில் இருந்து விரட்டப்பட்டார். அவர் மட்டுமில்லாமல் அணியின் கீ(key)வீரர்களாக இருந்த பலரும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் இது மிகப் பெரிய தவறாகும். ஒரு வீரரிடம் இருந்து அவர்களுக்கு என்ன வேண்டும் என்பது புரியவே இல்லை என ஹைதராபாத் அணியை முகமது நபி கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *