அஸ்வினுக்கு அணியில் இடம்... மேத்யூ ஹைடன் இல்லை... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரமான 11 வீரர்களை தேர்வு செய்த ருத்துராஜ் கெய்க்வாட் !! 1
அஸ்வினுக்கு அணியில் இடம்… மேத்யூ ஹைடன் இல்லை… சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரமான 11 வீரர்களை தேர்வு செய்த ருத்துராஜ் கெய்க்வாட்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர துவக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் டைம் சிறந்த ஆடும் லவனை தேர்வு செய்துள்ளார்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிளே-ஆப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பும் சிஎஸ்கே அணிக்கு பிரகாசமாக இருக்கிறது.

அஸ்வினுக்கு அணியில் இடம்... மேத்யூ ஹைடன் இல்லை... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரமான 11 வீரர்களை தேர்வு செய்த ருத்துராஜ் கெய்க்வாட் !! 2

தற்போது 13 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கடைசி லீக் போட்டியை டெல்லி அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடிப்பார்கள். பிளே-ஆப் சுற்றுக்கும் செல்வார்கள். மேலும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து நேரடியாக குவாலிபயர்-1 இல் விளையாடும் வாய்ப்பையும் பெரும் அளவிற்கு வலுவாக இருக்கிறது.

ருத்ராஜ் கெய்க்வாட்டின் 11 வீரர்கள் கொண்ட சென்னை அணி..

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயங்களை முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பேசி வருவதோடு தங்களுக்கு பிடித்தமான விஷயங்களையும் செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக தெரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி துவக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அஸ்வினுக்கு அணியில் இடம்... மேத்யூ ஹைடன் இல்லை... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரமான 11 வீரர்களை தேர்வு செய்த ருத்துராஜ் கெய்க்வாட் !! 3

ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வுசெய்து சென்னை அணியின் ஆல்டைம் சிறந்த ஆடும் லெவன்..
மைக்கேல் ஹஸி, டூப்ளேசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, MS தோனி (C), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ரவிச்சந்திரன் அஸ்வின், இம்ரான் தாஹிர், தீபக் சஹர், மோஹித் சர்மா.

சிஎஸ்கே அணி தன்னுடைய கடைசி லீக் போட்டியை வருகிற மே-20 டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாடவுள்ளது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு எந்த ஒரு குளறுபடி இல்லாமல் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *