மலிங்காவ விட இந்த பையன் தான் ரொம்ப ஆபத்து; மதீஷா பதிரானாவை பாராட்டி பேசிய சிக்கந்தர் ரசா !! 1
மலிங்காவ விட இந்த பையன் தான் ரொம்ப ஆபத்து; மதீஷா பதிரானாவை பாராட்டி பேசிய சிக்கந்தர் ரசா

முன்னாள் வீரர் லசீத் மலிங்காவை விட பதிரானா ஆபத்தான பந்துவீச்சாளர் என பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சிக்கந்தர் ரசா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

மலிங்காவ விட இந்த பையன் தான் ரொம்ப ஆபத்து; மதீஷா பதிரானாவை பாராட்டி பேசிய சிக்கந்தர் ரசா !! 2

கடந்த மார்ச் 31ம் தேதி துவங்கிய இந்த தொடர் அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது. குஜராத் அணி மட்டுமே இதுவரை ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி  செய்துள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, லக்னோ ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக கடுமையாக போராடி வருகின்றன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் வெற்றியடைய வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இந்தநிலையில், சென்னை அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வரும் பதிரானா குறித்து பேசிய பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரரான சிக்கந்தர் ரசா, மலிங்காவை விட பதிரானா ஆபத்தான பந்துவீச்சாளர் என தெரிவித்துள்ளார்.

மலிங்காவ விட இந்த பையன் தான் ரொம்ப ஆபத்து; மதீஷா பதிரானாவை பாராட்டி பேசிய சிக்கந்தர் ரசா !! 3

இது குறித்து சிக்கந்தர் ரசா பேசுகையில், “பதிரானா தனித்துவமிக்க பந்துவீச்சாளர். அவரிடம் அபாரமான திறமைகள் உள்ளன. முன்னாள் வீரர் லசீத் மலிங்காவின் பந்துவீச்சை எதிர்கொள்வதே மிக கடினம், ஆனால் என்னை பொறுத்தவரையில் மலிங்காவை விட பதிரானாவின் பந்துவீச்சை எதிர்கொள்வது தான் மிக கடினம். பதிரானா மலிங்காவை விட ஆபத்தான பந்துவீச்சாளர். மலிங்காவின் பந்துவீச்சு ஸ்டைலில் இருந்து பதிரானாவின் பந்துவீச்சு ஸ்டைல் மாறுபட்டது, மலிங்காவை விட பதிரானா தனது கையை கீழ் திசையில் இருந்து எடுத்து வந்து பந்துவிசுகிறார். சென்னை அணிக்கு எதிரானா போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு அதிர்ஷ்டமும் காரணம் தான், இல்லையெனில் பதிரானாவின் பந்துவீச்சை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருப்பது சுலபம் இல்லை” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *