இந்த வருடம் ஐபிஎல் பைனலுக்கு எந்த இரண்டு அணிகள் செல்லும்? அதில் எந்த அணி கோப்பையை வெல்லும்? என்று தென் ஆப்பிரிக்கா அணியின் ஜாம்பவான் ஜாக்குவஸ் காலிஸ் கணித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு முன்னர் ஐபிஎல் சீசன்கள் சொந்த மைதானம், வெளி மைதானம் என போட்டிகள் நடப்பட்டது. 2020இல் கொரோனா வந்ததால் பாதுகாப்பு காரணமாக ஒரு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில், மற்ற இரண்டு சீசன்கள் குறிப்பிட்ட சில மைதானங்களில் மட்டும் நடந்தது.
ஆனால் இந்த வருடம், கடந்த 2019ஆம் ஆண்டு வரை எப்படி நடந்ததோ, அதுபோல மீண்டும் பழைய முறைப்படி சொந்த மைதானத்தில் ஒரு போட்டி, வெளி மைதானத்தில் ஒரு போட்டி என்கிற வகையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
கடந்த ஐபிஎல் சீசனில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டதால் ஆட்டம் இன்னும் சூடுபிடித்துள்ளது. புதிய அணிகள் இரண்டுமே சிறப்பாக செயல்பட்டு கடந்த சீசனில் பிளே-ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
அதில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் ஐபிஎல் சீசனிலேயே கோப்பையை வென்று பலரையும் கவனிக்க வைத்தது. இந்த ஐபிஎல் சீசனில் இந்த அணிகள் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீதும் இந்த ஐபிஎல் சீசனில் எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது. சொந்த மைதானத்தில் மீண்டும் விளையாடுகின்றனர்.
இவை ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் ஐபிஎல் குறித்த கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். எந்த அணி கோப்பையை தட்டிச்செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது? எந்தெந்த அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்? என்கிற என கணித்து வருகின்றனர்.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா அணியின் ஜாம்பவான் ஜாக்குவஸ் காலிஸ், எந்த இரண்டு அணிகள் ஐபிஎல் பைனலுக்கு செல்லும்? அதில் எந்த அணி கோப்பையை வெல்லும்? என்று கணித்திருக்கிறார்.
“எனது கணிப்பில் பலம்மிக்க அணிகளாக டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளும் இருக்கின்றன. இந்த இரண்டு அணிகள் தான் பைனலில் மோதும் என்று எண்ணுகிறேன். அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் கலவையாக இருக்கிறது. ஆல்ரவுண்டர்களும் அந்த அணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வார்னரின் கேப்டன் பொறுப்பு நன்றாக தெரியும். ஆகையால் ஐபிஎல் பைனலில் டெல்லி அணி வெற்றி பெறும் என்று கருதுகிறேன்.” என தனது கணிப்பை கூறினார்.