ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனதற்கு இதுதான் முக்கிய காரணம் ; முன்னாள் வீரர் சொல்கிறார்..
2023 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமே இந்த வீரரை சரியாக பயன்படுத்தாதது தான் என ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
பல நட்சத்திர வீரர்களை உள்ளடக்கி ஐபிஎல் தொடரின் மிகப் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை.
அணியின் கேப்டனாக பல ஆண்டு செயல்பட்டு தனது அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்ற விரத்தியால் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து பேட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளதாக விராட் கோலி தெரிவித்திருந்ததால், அணியின் புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டூப்லசிஸ் நியமிக்கப்பட்டார். ஆனால் 2022 ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணியால் பிளே ஆப் தகுதி பெற முடியவில்லை.
இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரிலாவது பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2023 ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணிக்கு மிக மோசமாக தொடராக அமைந்து விட்டது.
இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வெளியேறுவதற்கான காரணம் என்னவென்பதை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் விவாதித்து வருவதோடு பெங்களூரு அணிக்கு உரிய அறிவுரைகளையும் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ஹைதராபாத் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி., நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி, இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்காவை சரியான முறையில் பயன்படுத்தாததும் தோல்விக்கு முக்கிய காரணம் என்று செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாம் மூடி தெரிவித்ததாவது., “பெங்களூர் அணி தன்னிடம் இருந்த சிறந்த ஒன்றை பயன்படுத்த தவறியது என்றால் அது ஹசரங்காவை தான்,ஹசரங்க ஒரு ஆல்ரவுண்டராக பர்க்கபடுவதை விட அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை பல முறை நிரூபித்துள்ளார்.இலங்கை அணிக்காக ஒரு பேட்ஸ்மெனாக பல முறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றியை உறுதிசெய்துள்ளார். பெங்களூர் அணி அவரை இம்பெக்ட் பிளேயராக பயன்படுத்தியது தவறில்லை. ஆனால் அவரை டாப் ஆர்டரில் விளையாட வைத்திருக்க வேண்டும், அதற்குபதில் அவரை 8வது அல்லது 9வது இடத்தில் அதிகமுறை பயன்படுத்தி அவரின் திறமையை வீணடித்துவிட்டது” என பெங்களூர் அணியின் தவறை டாம் மூடி சுட்டிக்காட்டியிருந்தார்.
‘ஏ சாலா கப் நம்தே’ என பெங்களூர் அணியை கிண்டல் செய்த பலரும் தற்போது விராட் கோலிக்காக பெங்களூர் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என ஆசைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்…