தோனி – ரோஹித் சர்மா இருவரில் யார் சிறந்த கேப்டன்… அதிரடியாக பேசிய விரேந்திர சேவாக்
சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை விட ரோஹித் சர்மா தான் சிறந்த கேப்டன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தன்னுடைய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற வரிசையில் மகேந்திர சிங் தோனி இருந்தாலும், தன்னுடைய அணிக்கு அதிக டைட்டில் பட்டதை வென்று கொடுத்த வரிசையில் தோணி இரண்டாவது இடத்திலும் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால் இந்த ஒரு காரணத்தை வைத்து தோனியை விட ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்று யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை ரோகித் சர்மாவே ஏற்றுக்கொள்ள மாட்டார்.
ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக்., செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஐபிஎல் தொடரை பொருத்தவரையில், ரோஹித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகிய இருவரும் கடந்து வந்த பாதையின் அடிப்படையில் ரோகித் சர்மாவே சிறந்த கேப்டன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேவாக் தெரிவித்ததாவது, “இந்த கேள்விக்கான விடையை எண்களே (சாதனைகள்) பதிலளிக்கும், முதலில் தோனியை குறித்து பார்த்தோம் என்றால்,அவர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு அதிக அனுபவங்களை பெற்ற பின்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஆனால் ரோஹித் சர்மா அப்படி கிடையாது, அவர் முதல் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகத்தான் கேப்டனாக செயல்பட து. அதற்கு பின்பு அவருக்கு வெற்றி மழை பொழிந்தது., இதனால்தான் தோனியை விட ரோஹித் சர்மாவிற்கு அதிக பாராட்டுகளை நாம் கொடுக்க வேண்டும்., இந்திய அணி கங்குளி தலைமையில் எப்படி ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட துவங்கியதோ அதேபோன்று ரோகித் சர்மா தலைமையிலும் தற்பொழுது சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த காரணங்களின் அடிப்படையில் வைத்து பார்த்தால் நான் சிறந்த கேப்டனாக ரோகித் சர்மாவை தான் தேர்வு செய்வேன்” என்று சேவாக் தெரிவித்திருந்தார்.
சேவாக்கின் இந்த பேச்சு இந்திய கிரிக்கெட் வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.