2,0,9,8.... கொல்கத்தாவிடம் ஈசியாக சரணடைந்த சன் ரைசர்ஸ் வீரர்கள்; 113 ரன்களில் ஆல் அவுட்டானது ஹைதராபாத் அணி !! 1
2,0,9,8…. கொல்கத்தாவிடம் ஈசியாக சரணடைந்த சன் ரைசர்ஸ் வீரர்கள்; 113 ரன்களில் ஆல் அவுட்டானது ஹைதராபாத் அணி

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டனான கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

2,0,9,8.... கொல்கத்தாவிடம் ஈசியாக சரணடைந்த சன் ரைசர்ஸ் வீரர்கள்; 113 ரன்களில் ஆல் அவுட்டானது ஹைதராபாத் அணி !! 2

இறுதி போட்டி என்ற பயம் இல்லாமல் கம்மின்ஸ் தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததை பலரும் வியந்த பாராட்டிய நிலையில், ஹைதராபாத் அணிக்கோ முதல் ஓவரிலேயே பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

ஹைதராபாத் அணியின் அதிரடி துவக்க வீரரான அபிசேக் சர்மா வெறும் 2 ரன்களில், மிட்செல் ஸ்டார்க் வீசிய துல்லியமான பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான ட்ராவிஸ் ஹெட் ஒரு ரன் கூட எடுக்காமல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.

2,0,9,8.... கொல்கத்தாவிடம் ஈசியாக சரணடைந்த சன் ரைசர்ஸ் வீரர்கள்; 113 ரன்களில் ஆல் அவுட்டானது ஹைதராபாத் அணி !! 3

 

அடுத்தடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாட்டி (9), மார்கரம் (20), நித்திஷ் ரெட்டி (13), கிளாசன் (16) என ஹைதராபாத் அணியின் அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும், கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.

கடைசி நேரத்தில் தனியாக போராடிய கம்மின்ஸும், இறுதி வரை விக்கெட்டை தக்க வைத்து கொள்ள முடியாமல் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்ததால் 18.3 ஓவர் முடிவில் வெறும் 113 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளது.

2,0,9,8.... கொல்கத்தாவிடம் ஈசியாக சரணடைந்த சன் ரைசர்ஸ் வீரர்கள்; 113 ரன்களில் ஆல் அவுட்டானது ஹைதராபாத் அணி !! 4

பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரியூ ரசல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மற்ற பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *