பாட் கம்மின்ஸ்
சாம்பியன் பட்டம் யாருக்கு..? தைரியமாக கொல்கத்தாவிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் பாட் கம்மின்ஸ்

17வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடருக்கான சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான இறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அனைத்து போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்று சேஸிங்கில் 100 சதவீத வெற்றியை கொண்ட அணியாக திகழ்ந்தாலும், பாட் கம்மின்ஸ் கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியுடனான இரண்டாவது குவாலிபயர் போட்டியின் முடிவை அடிப்படையாக வைத்தே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளதாக பாட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

சாம்பியன் பட்டம் யாருக்கு..? தைரியமாக கொல்கத்தாவிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் பாட் கம்மின்ஸ் !! 1

இறுதி போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்துல் சமதிற்கு பதிலாக சபாஷ் அஹமத் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே வேளையில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் இல்லாமல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவன்; 

ட்ராவிஸ் ஹெட், அபிசேக் சர்மா, ராகுல்  திரிபாதி, மார்கரம், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசன், சபாஷ் அஹமத், பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனாத்கட், நடராஜன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆடும் லெவன்; 

ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரியூ ரசல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்சித் ரானா, வருண் சக்கரவர்த்தி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *