13 கோடி உறுதி... இந்த தமிழக வீரரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி நிச்சயமாக சண்டை செய்யும்; ரவிச்சந்திர அஸ்வின் உறுதி !! 1
13 கோடி உறுதி… இந்த தமிழக வீரரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி நிச்சயமாக சண்டை செய்யும்; ரவிச்சந்திர அஸ்வின் உறுதி

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த ஷாருக் கானை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவும் என ரவிச்சந்திர அஸ்வின் ஆரூடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

13 கோடி உறுதி... இந்த தமிழக வீரரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி நிச்சயமாக சண்டை செய்யும்; ரவிச்சந்திர அஸ்வின் உறுதி !! 2

இதுவரை 16 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் துவங்க உள்ளது. அடுத்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 19ம் தேதி நடைபெற  உள்ளது. ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்து கொள்ள ஐபிஎல்  நிர்வாகம் கொடுத்திருந்த கெடு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. ஒவ்வொரு அணிகளும் தங்களக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி, தனது அணியின் சில சீனியர் வீரர்களை விடுவித்ததோடு இல்லாமல் ஷாருக் கான் போன்ற இளம் வீரர்கள் சிலரையும் விடுவித்தது.

13 கோடி உறுதி... இந்த தமிழக வீரரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி நிச்சயமாக சண்டை செய்யும்; ரவிச்சந்திர அஸ்வின் உறுதி !! 3

தமிழகத்தை சேர்ந்த ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி விடுவித்துள்ளதால், அடுத்த தொடருக்கான மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள இளம் வீரர்களில் ஷாருக் கான் மிக முக்கியமானவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஷாருக் கானுக்கு ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவும் என இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரவிச்சந்திர அஸ்வின் பேசுகையில், “ஷாருக் கானிற்கு ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவும். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஷாருக் கானை தங்களது அணியில் எடுக்க கடுமையாக முயற்சிக்கும். ஏனெனில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது மிக முக்கிய வீரரும், மிடில் ஆர்டர் மற்றும் பினிசருமான ஹர்திக் பாண்டியாவை இழந்துள்ளதால் அவருக்கு மாற்றான அதிரடி வீரர் ஒருவரை எப்படியாவது ஏலத்தில் எடுத்துவிட வேண்டும் என முயற்சிக்கும். பஞ்சாப் அணி ஷாரு கானை 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது என்பதால் எதிர்வரும் ஏலத்தில் ஷாருக் கான் நிச்சயம் 12 முதல் 13 கோடி ரூபாய்க்கு ஏலம் போவார் என்றே கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *