சென்னை சூப்பர் கிங்ஸ்
கொஞ்சம் கஷ்டம் தான்… பேட்டிங்கில் தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்; ஹைதராபாத் அணிக்கு எளிய இலக்கு

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 18வது போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.

ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

கொஞ்சம் கஷ்டம் தான்... பேட்டிங்கில் தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்; ஹைதராபாத் அணிக்கு எளிய இலக்கு !! 1

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் ரவீந்திரா 12 ரன்னிலும், ருத்துராஜ் கெய்க்வாட் 26 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

அடுத்ததாக களத்திற்கு வந்த ரஹானே 30 பந்துகளில் 35 ரன்களும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிவம் துபே 24 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.

ஜடேஜா இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தாலும் பெரிதாக ரன்னும் குவிக்கவில்லை. ஜடேஜா 23 பந்துகளில் 31 ரன்களும், டேரியல் மிட்செல் 13 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 165 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *