அந்த “Brand”அ உடைக்கிறதுல தாண்டா நாங்க ஸ்பெஸலிஸ்டே... கொல்கத்தாவை கெத்தாக வீழ்த்தியது சென்னை படை !! 1
அந்த “Brand”அ உடைக்கிறதுல தாண்டா நாங்க ஸ்பெஸலிஸ்டே… கொல்கத்தாவை கெத்தாக வீழ்த்தியது சென்னை படை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 22வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார்.

அந்த “Brand”அ உடைக்கிறதுல தாண்டா நாங்க ஸ்பெஸலிஸ்டே... கொல்கத்தாவை கெத்தாக வீழ்த்தியது சென்னை படை !! 2

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் தேஸ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா 15 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய டேரியல் மிட்செல் 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த சென்னை அணியின் சிக்ஸர் நாயகனான சிவம் துபே 18 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலமும், கடைசி வரை களத்தில் இருந்த கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 58 பந்துகளில் 67* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 17.4 ஓவரில் இலக்கை மிக இலகுவாக எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியும் பெற்றது.

அந்த “Brand”அ உடைக்கிறதுல தாண்டா நாங்க ஸ்பெஸலிஸ்டே... கொல்கத்தாவை கெத்தாக வீழ்த்தியது சென்னை படை !! 3

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *