ஹைதராபாத் 
ஹைதராபாத் 
இதுக்கு மேல என்னடா செய்ய முடியும்..? முடிந்தவரை போராடிய டெல்லி அணி… டெல்லியை ஆல் அவுட் செய்து அபார வெற்றி பெற்ற ஹைதராபாத்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 35வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதுக்கு மேல என்னடா செய்ய முடியும்..? முடிந்தவரை போராடிய டெல்லி அணி... டெல்லியை ஆல் அவுட் செய்து அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் !! 1

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடியது. ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர்களான அபிசேக் சர்மா 12 பந்துகளில் 46 ரன்களும், டர்வீஸ் ஹெட் 32 பந்துகளில் 89 ரன்களும், அப்துல் சமத் 29 பந்துகளில் 59 ரன்களும் எடுத்து  கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 266 ரன்கள் குவித்தது.

இதுக்கு மேல என்னடா செய்ய முடியும்..? முடிந்தவரை போராடிய டெல்லி அணி... டெல்லியை ஆல் அவுட் செய்து அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் !! 2

இதன்பின் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அசாத்திய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அந்த அணியின் இளம் அதிரடி நாயகனான ஜேக் பிரேசர் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்ததோடு, மொத்தம் 18 பந்துகளில் 65 ரன்களும், அபிசேக் போரல் 42 ரன்களும், ரிஷப் பண்ட் 44 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், இலக்கு மிகப்பெரிய என்பதாலும், டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறியதாலும் 19.1 ஓவரில் 199 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இதுக்கு மேல என்னடா செய்ய முடியும்..? முடிந்தவரை போராடிய டெல்லி அணி... டெல்லியை ஆல் அவுட் செய்து அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் !! 3

பந்துவீச்சில் ஹைதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், மார்கண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *