டேவிட் வார்னர் மீண்டும் நீக்கம்... டெல்லி கேப்பிடல்ஸிற்கு எதிராக பந்துவீச்சை  தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ் !! 1
டேவிட் வார்னர் மீண்டும் நீக்கம்… டெல்லி கேப்பிடல்ஸிற்கு எதிராக பந்துவீச்சை  தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ் !!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டெல்லி அணி தனது ஆடும் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்துள்ளது. சீனியர் வீரரான டேவிட் வார்னர் மீண்டும் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாய் ஹோப் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார். அதே போன்று லலீத் யாதவ் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுமித் குமார் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே வேளையில் டெல்லி அணியுடனான போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே குஜராத் அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆடும் லெவன்; 

பிரத்வி ஷா, ஜேக் பிரேசர், அபிசேக் போரல், சாய் ஹோப், ரிஷப் பட், திரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்கியா, கலீல் அஹமத், முகேஷ் குமார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆடும் லெவன்; 

விர்திமான் சஹா, சுப்மன் கில், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லாஹ் ஓமர்சாய், ராகுல் திவாடியா, ஷாருக் கான், ரசீத் கான், சாய் கிஷோர், நூர் முகமது, மோஹித் சர்மா, சந்தீப் வாரியர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *