இவனுகள சமாளிக்க வேற வழியே இல்ல... டாஸ் வென்று ஹைதராபாத்திற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது பெங்களூரு !! 1
இவனுகள சமாளிக்க வேற வழியே இல்ல… டாஸ் வென்று ஹைதராபாத்திற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது பெங்களூரு

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஹைதராபாத் அணியுடனான இந்த போட்டிக்கான பெங்களூர் அணியின் ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதே வேளையில் ஹைதராபாத் அணி தனது ஆடும் லெவனில் ஒரு மாற்றம் செய்துள்ளது. வாசிங்டன் சுந்தர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயதேவ் உனாத்கட் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவன்; 

அபிசேக் சர்மா, மார்கரம், ஹென்ரிச் கிளாசன், நித்தீஷ் ரெட்டி, அப்துல் சமத், சபாஷ் அஹமத், பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனாத்கட், மாயன்க் மார்கண்டே, நடராஜன.

பெங்களூர் அணியின் ஆடும் லெவன்; 

விராட் கோலி, டூபிளசிஸ், வில் ஜாக்ஸ், ராஜத் படித்தர், கேமிரான் க்ரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லம்ரோர், கர்ண் சர்மா, லோகி பெர்குசன், முகமது சிராஜ், யஸ் தயால்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *