சரவெடி பேட்டிங்... பஞ்சாப்பின் பந்துவீச்சை சிதறடித்த சுனில் நரைன், பிலிப் சால்ட்; 261 ரன்கள் குவித்தது கொல்கத்தா !! 1
சரவெடி பேட்டிங்… பஞ்சாப்பின் பந்துவீச்சை சிதறடித்த சுனில் நரைன், பிலிப் சால்ட்; 261 ரன்கள் குவித்தது கொல்கத்தா

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 42வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

சரவெடி பேட்டிங்... பஞ்சாப்பின் பந்துவீச்சை சிதறடித்த சுனில் நரைன், பிலிப் சால்ட்; 261 ரன்கள் குவித்தது கொல்கத்தா !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான சுனில் நரைன் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் வழக்கம் போல அதிரடியான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 138 ரன்கள் சேர்த்திருந்த போது சுனில் நரைன் (71 ரன்கள், 32 பந்துகள்) விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க வீரரான பிலிப் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் (39), ரசல் (24), ஸ்ரேயஸ் ஐயர் (28) என அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 261 ரன்கள் குவித்துள்ளது.

சரவெடி பேட்டிங்... பஞ்சாப்பின் பந்துவீச்சை சிதறடித்த சுனில் நரைன், பிலிப் சால்ட்; 261 ரன்கள் குவித்தது கொல்கத்தா !! 3

பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ரபாடாவை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *