டெல்லியிடமும் மரண அடி வாங்கிய மும்பை... மும்பை இந்தியன்ஸிற்கு எதிராக 257 ரன்கள் குவித்தது டெல்லி கேப்பிடல்ஸ் !! 1
டெல்லியிடமும் மரண அடி வாங்கிய மும்பை… மும்பை இந்தியன்ஸிற்கு எதிராக 257 ரன்கள் குவித்தது டெல்லி கேப்பிடல்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 257  ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 43வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லியிடமும் மரண அடி வாங்கிய மும்பை... மும்பை இந்தியன்ஸிற்கு எதிராக 257 ரன்கள் குவித்தது டெல்லி கேப்பிடல்ஸ் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஜேக் ரேசர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்து 15 பந்துகளில் அரைசதம் அடித்ததோடு மொத்தம் 27 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான அபிசேக் போரல் 36 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

அடுத்ததாக களத்திற்கு வந்த சாய் ஹோப் 17 பந்துகளில் 41 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் 19 பந்துகளில் 29 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.

கடந்த போடிகளை போலவே இந்த போட்டியிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 48 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 11 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி 257 ரன்கள் எடுத்துள்ளது.

பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் துசாரா ஆகியோரை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *