யாரு சாமி நீ..? பும்ராஹ் ஓவரில் 18 ரன்கள்... 15 பந்துகளில் அரைசதம்; மும்பை இந்தியன்ஸை கதறவிடும் 22 வயது அதிரடி நாயகன் !! 1
யாரு சாமி நீ..? பும்ராஹ் ஓவரில் 18 ரன்கள்… 15 பந்துகளில் அரைசதம்; மும்பை இந்தியன்ஸை கதறவிடும் 22 வயது அதிரடி நாயகன்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் வீரரான ஜேக் பிரேசர் 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

17வது ஐபிஎல் தொடரின் 43வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஜேக் பிரேசர் – அபிசேக் போரல் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

டெல்லி அணியின் அதிரடி நாயகனான ஜேக் பிரேசர் கடந்த போட்டிகளை போன்று இந்த போட்டியிலும் ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் போட்டியின் முதல் ஓவரிலேயே டெல்லி அணி 19 ரன்கள் குவித்தது. பும்ராஹ் வீசிய இரண்டாவது ஓவரில் 18 ரன்கள் குவித்தது.

பும்ராஹ், ஹர்திக் பாண்டியா, பியூஸ் சாவ்லா என மும்பை இந்தியன்ஸ் அணியின் அனைத்து முக்கிய பந்துவீச்சாளர்களின் பந்தையும் பாரபட்சமே இல்லாமல் பிரித்து மேய்ந்த ஜேக் பிரேசர் 15 பந்துகளில் அரைசமும் அடித்து அசத்தினார். ஜேக் பிரேசர் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போதும் 15 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தவர்.

ஜேக் பிரேசரின் அதிரடி பேட்டிங்கின் மூலம் பவர்ப்ளே ஓவர்களான முதல் 6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்துள்ளது. ஜேக் பிரேசர் 24 பந்துகளில் 78 ரன்கள் குவித்து மும்பை  இந்தியன்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *