சதத்தை தவறவிட்ட ருத்துராஜ் கெய்க்வாட்... சிவம் துபே, டேரியல் மிட்செல் மிரட்டல்; 212 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 1
சதத்தை தவறவிட்ட ருத்துராஜ் கெய்க்வாட்… சிவம் துபே, டேரியல் மிட்செல் மிரட்டல்; 212 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.

சதத்தை தவறவிட்ட ருத்துராஜ் கெய்க்வாட்... சிவம் துபே, டேரியல் மிட்செல் மிரட்டல்; 212 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 2

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு ரஹானே 9 ரன்னில் விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றம் கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த டேரியல் மிட்செல் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, தனது முதல் அரைசதத்தை பதிவு செய்ததோடு 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

சதத்தை தவறவிட்ட ருத்துராஜ் கெய்க்வாட்... சிவம் துபே, டேரியல் மிட்செல் மிரட்டல்; 212 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 2

இதன்பின் களமிறங்கிய சிவம் துபே வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தேவைக்கு ஏற்ப ரன்னும் குவித்த கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் 54 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்து வெறும் 2 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பையும் இழந்தார்.

இறுதி வரை ஆட்டமிழக்காத சிவம் துபே 20 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 39 ரன்களும், தோனி 5 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 212 ரன்கள் குவித்துள்ளது.

பந்துவீச்சில் ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனாத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *