மீண்டும் டாஸை இழந்த ருத்துராஜ்... முதல் முறையாக மிட்செல் சாட்னருக்கு டீமில் இடம்; முதலில் பேட்டிங் செய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் !! 1
மீண்டும் டாஸை இழந்த ருத்துராஜ்… முதல் முறையாக மிட்செல் சாட்னருக்கு டீமில் இடம்; முதலில் பேட்டிங் செய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 53வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சாம் கர்ரான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான சாம் கர்ரான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்றைய போட்டியையும் பதிரானா இல்லாமல் சந்திக்கிறது. முஸ்தபிசுர் ரஹ்மான் வங்கதேசம் திரும்பிவிட்டதால் அவருக்கு பதிலாக மிட்செல் சாட்னருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர கடந்த போட்டியில் விளையாடிய ஷர்துல் தாகூர், ரிச்சர்ட் போன்ற வீரர்களே இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதே வேளையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்;

அஜின்கியா ரஹானே, ருத்துராஜ் கெய்க்வாட், டேரியல் மிட்செல், சிவம் துபே, மொய்ன் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி, மிட்செல் சாட்னர், ஷர்துல் தாகூர், ரிச்சர்ட், துசார் தேஸ்பாண்டே.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்;

ஜானி பாரிஸ்டோ, ரிலே ரூசோவ், ஷாசாங் சிங், சாம் கர்ரான், ஜித்தேஷ் சர்மா, அசுதோஷ் சர்மா, ஹர்ப்ரீட் பிரார், ஹர்சல் பட்டேல், ராகுல் சாஹர், காகிசோ ரபாடா, அர்ஸ்தீப் சிங்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *