மிட்செல் சாட்னர் நீக்கம்... டாஸை இழந்த ருத்துராஜ் கெய்க்வாட்; முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் !! 1
மிட்செல் சாட்னர் நீக்கம்… டாஸை இழந்த ருத்துராஜ் கெய்க்வாட்; முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 61வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

கிட்டத்தட்ட வாழ்வா சாவா போட்டியான இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடும் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிட்செல் சாட்னர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீக்‌ஷன்னா ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். ரச்சின் ரவீந்திரா மற்றும் ருத்துராஜ் கெய்வ்காட் ஆகியோர் இந்த போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர், மிட்செல் மூன்றாவது இடத்தில் களமிறங்க உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்;

ரச்சின் ரவீந்திரா, ருத்துராஜ் கெய்க்வாட், டேரியல் மிட்செல், மொய்ன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி, ஷர்துல் தாகூர், துசார் தேஸ்பாண்டே, சிமர்ஜித் சிங், மகேஷ் தீக்‌ஷன்னா.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆடும் லெவன்;

யசஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ரியான் பிராக், சுபம் துபே, துருவ் ஜூரல், ரவிச்சந்திர அஸ்வின், டிரண்ட் பவுல்ட், ஆவேஸ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *