மரியாதை இல்லாம பேசுறேனு நினைக்காதீங்க... பெங்களூர் அணி செய்தது முட்டாள்தனம்; ஆகாஷ் சோப்ரா விளாசல் !! 1
மரியாதை இல்லாம பேசுறேனு நினைக்காதீங்க… பெங்களூர் அணி செய்தது முட்டாள்தனம்; ஆகாஷ் சோப்ரா விளாசல்

அடுத்த ஐபிஎல் தொடருக்கான பெங்களூர் அணி பந்துவீச்சில் பலவீனமான அணியாக இருப்பதாக முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மார்ச் மாத இறுதியில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரியாதை இல்லாம பேசுறேனு நினைக்காதீங்க... பெங்களூர் அணி செய்தது முட்டாள்தனம்; ஆகாஷ் சோப்ரா விளாசல் !! 2

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்றது.

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் எடுத்து கொண்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட சில அணிகள் மட்டுமே ஏலத்தை மிக சிறப்பாக கையாண்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனக்கு தேவையான வீரர்களை மிக குறைந்த விலையில் எடுத்து கொண்டது, ஆனால் இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாத பெங்களூர் அணி ஏலத்திலும் மிக மோசமாக செயல்பட்டது.

யஷ் தயால், அல்ஜாரி ஜோசப், டாம் கர்ரான் போன்ற வீரர்களை அதிகமான விலைக்கு ஏலத்தில் எடுத்த பெங்களூர் அணியை கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ராவும் தனது பங்கிற்கு பெங்களூர் அணியை விமர்சித்து பேசியுள்ளார்.

மரியாதை இல்லாம பேசுறேனு நினைக்காதீங்க... பெங்களூர் அணி செய்தது முட்டாள்தனம்; ஆகாஷ் சோப்ரா விளாசல் !! 3

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “பெங்களூர் அணி இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றூக்கு தகுதி பெறலாம், ஆனால் பெங்களூர் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கேமிரான் க்ரீன் உள்ளிட்ட சில வீரர்களின் கையில் தான் உள்ளது. துவக்க வீரர்கள் தங்களது வேலையை சரியாக செய்து, கேமிரான் க்ரீன் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் அது பெங்களூர் அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து செல்லலாம். அடுத்த தொடருக்கான பெங்களூர் அணி சுழற்பந்து வீச்சில் மிக சாதரணமான அணியாக உள்ளது. அல்ஜாரி ஜோசப்பை பெங்களூர் அணி எதற்காக 11 கோடி கொடுத்து வாங்கியது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அல்ஜாரி ஜோசப்பின் திறமையை நான் குறைத்து மதிப்பிடுவதாக கருத வேண்டாம், அவருக்கு 11 கோடி மிக அதிகம் என்பதே எனது கருத்து. ஷர்துல் தாகூர் உள்ளிட்ட சில பந்துவீச்சாளர்கள் குறைவான விலைக்கு ஏலம் போனபோது அல்ஜாரி ஜோசப், யஸ் தயால் போன்ற வீரர்களை பெங்களூர் அணி போட்டி போட்டு அதிகமான விலைக்கு ஏலத்தில் எடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *