இப்ப பேசுங்கடா பாப்போம்... ஹைதராபாத் அணிக்கு ஷாக் கொடுத்த ஸ்டார்க்; 159 ரன்களில் ஆல் அவுட்டானது ஹைதராபாத் !! 1
இப்ப பேசுங்கடா பாப்போம்… ஹைதராபாத் அணிக்கு ஷாக் கொடுத்த ஸ்டார்க்; 159 ரன்களில் ஆல் அவுட்டானது ஹைதராபாத்

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இப்ப பேசுங்கடா பாப்போம்... ஹைதராபாத் அணிக்கு ஷாக் கொடுத்த ஸ்டார்க்; 159 ரன்களில் ஆல் அவுட்டானது ஹைதராபாத் !! 2

முதலில் கெத்தாக பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத் அணிக்கு துவக்கமே மிக மோசமானதாக அமைந்தது அந்த அணியின் அதிரடி துவக்க வீரர்களான ட்ராவிஸ் ஹெட் (0) மற்றும் அபிசேக் சர்மா (3) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டினர். அடுத்ததாக களத்திற்கு வந்த நித்திஷ் ரெட்டி (9), மற்றும் சபாஷ் அஹமத் (0) அகியோரை மிட்செல் ஸ்டார்க் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி அசத்தினார்.

பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராகுல் த்ரிபாதி 55 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டானார். ஹென்ரிச் கிளாசன் 32 ரன்கள் எடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். அப்துல் சமத் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இப்ப பேசுங்கடா பாப்போம்... ஹைதராபாத் அணிக்கு ஷாக் கொடுத்த ஸ்டார்க்; 159 ரன்களில் ஆல் அவுட்டானது ஹைதராபாத் !! 3

கடைசி நேரத்தில் பாட் கம்மின்ஸ் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் கடும் போராட்டத்திற்கு பிறகு 150 ரன்களை கடந்த ஹைதராபாத் அணி, 19.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்திருந்த போது ஆல் அவுட்டானது.

பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *