அம்பயர் உடன் தொடர்பு வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி
உலகின் மிக சிறந்த டி20 அணி என்று பெயர் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் இதுவரை 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் உலகின் தலைசிறந்த வீரர்கள் விளையாடி வருகிறார்கள் இருந்தபோதும் அந்த அணி வெற்றி பெறுவதற்கு கள நடுவர்கள் உதவுகிறார்கள் என்று பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் கருத்து பரவியிருக்கிறது.
மிகத் திறமையான அணியாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி மீது இப்படிப்பட்ட ஒரு பொய் குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் பரவி இருப்பது வருத்தம் அளிக்கிறது என் கிரிக்கெட் வீரர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
