ஐபிஎல் 14வது சீசன் வருகின்ற ஏப்ரல் 9 முதல் மே 30 வரை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் இந்தாண்டு எந்தொரு அணியும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாட முடியாது என்று அதிரடி முடிவை அறிவித்துள்ளனர். ஏப்ரல் 9 நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இந்த போட்டி பயோ பபுள் விதிமுறைகளின் படி நடக்க உள்ளது.
உலகில் ஐபிஎல் போட்டிக்கான ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு அணியிலும் குறிப்பிட்ட வீரர்கள் தங்களுக்கென தனி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளனர் அப்பேர்பட்ட புகழ்பெற்ற 5 வீரர்களை இங்கு நாம் காண்போம்.
ஏபி டிவில்லியர்ஸ்
சவுத் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் செல்லமாக மிஸ்டர் 360 என்று அழைக்கப்படுவார், பெயருக்கு ஏற்றார் போல் மைதானங்களில் அனைத்து திசைகளிலும் பந்தை அடித்து துவம்சம் செய்யக்கூடிய வல்லவர்.2018 முதல் 2010 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய இவர் அதற்குப்பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் போட்டிகளில் இவர் 236 சிக்ஸ்களை அடித்து அசத்தியுள்ளார் மேலும். 156 இன்னிங்சில் பங்கேற்று 38 அரை சதமும் 3 சதம் அடித்து அசத்தியுள்ளார். இவருடைய உதவியால் பெங்களூரு அணி பலமுறை வெற்றியை பெற்று கொண்டாடியுள்ளது.
கெரான் பொலார்ட்
2010 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் கெரான் பொலார்ட் ஐபிஎல் போட்டியில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார். இவர் பேட்டிங்கிலும் ,பந்துவீச்சிலும் மற்றும் ஃபீல்டிங்கிலும் அசத்தி மும்பை இந்தியன்ஸ் அணியை பலமுறை வெற்றி பெறச் செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் கோர் அணியின் முக்கிய வீரராக திகழும் கெரான் பொலார்ட் அதிரடியாக விளையாடி எதிரணி பந்துவீச்சாளர்களை பின்னி எடுப்பதில் வல்லவராக திகழ்ந்தார் கொண்டிருக்கிறார்.

கிறிஸ் கெயில்
யுனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் போட்டியில் யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை படைத்துள்ளார்,ஐபிஎல் போட்டியில் அதிகமான சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேபோன்று அதிவிரைவான சதங்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியில் இவர் 349 சிக்ஸ்களை அடித்துள்ளார் மேலும் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டியின் மூலம் உலகின் புகழ்பெற்ற வீரராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
லசித் மலிங்கா
2019 ஐபிஎல் போட்டியில் நடந்த இறுதி சுற்று எந்த ஒரு கிரிக்கெட் ரசிகர்களாலும் மறந்து இருக்க முடியாது, ஏனென்றால் அன்று லசித் மலிங்கா வீசிய கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த லசித் மலிங்கா 122 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 170 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.மேலும் ஐபிஎல் போட்டியினால் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற இவர் ஐபிஎல் போட்டியில் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
எம்எஸ் தோனி
ஐபிஎல் போட்டி ஆரம்பமான காலகட்டம் முதல் சென்னை அணியின் கேப்டனாக திகழக்கூடிய தல தோனி கடந்த ஆண்டை தவிர மற்ற அனைத்து ஆண்டுகளிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேர வைத்து அழைத்துச் சென்றுள்ளார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மூன்று முறை டைட்டில் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

தல தோனி காகவே சென்னை அணியின் ரசிகர்களாக பல நபர்கள் உள்ளார்கள் என்று கூறுவது மிகையாகாது அந்த அளவிற்கு தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே வைத்திருக்கும் தல தோனி, ஐபிஎல் போட்டியில் அதிகப்படியான புகழ்பெற்ற வீரர்களில் முதன்மையானவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது