மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய பிறகு சிறப்பாக செயல்பட்ட 5 வீரர்கள் 1

ஐபிஎல் போட்டியில் ஐந்து முறை டைட்டில் பட்டத்தை வென்று எந்த ஒரு அணியும் இதுவரை செய்திராத ஒரு வரலாற்றுச் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி செய்துள்ளது மேலும் தலை சிறந்த வீரர்களை உருவாக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி .டி20 போட்டியில் உலகின் தலை சிறந்த அணியாக திகழ்கிறது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 வீரர்கள் அதற்குப் பின் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளனர் அப்பேர்ப்பட்ட 5 வீரர்களை பற்றி இங்கு காண்போம்.

1,டுவெய்ன் பிராவோ

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஐபிஎல் போட்டியில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார் அந்த அளவுக்கு இவர் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படும் பிராவோ 2008 முதல் 2010 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார் அதன்பின் 2011 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மிக சிறப்பாக விளையாடி பல முறை சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய பிறகு சிறப்பாக செயல்பட்ட 5 வீரர்கள் 2

நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோ 140 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 1490 ரன்கள் எடுத்துள்ளார் மேலும் பந்துவீச்சில் 153 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஸ்ரேயஸ் கோபால்

2014ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கோபாலுக்கு அந்தளவுக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை அதன்பின் 2018 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட கோபால் மிக சிறப்பாக செயல்பட்டு 11 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மேலும் அவருடைய எக்கனாமிக் ரேட் 7.61ஆகும்

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய பிறகு சிறப்பாக செயல்பட்ட 5 வீரர்கள் 3

லெக் ஸ்பின்னர் கோபால் ஐபிஎல் 45 போட்டிகளில் பங்கேற்று 48 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் இவருடைய எக்கனாமிக் ரேட் 7.85

3. ஷிகர் தவான்

தனது ஐபிஎல் வரலாற்றை டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் துவங்கிய ஷிகர் தவான் மிக சிறப்பாக செயல் பட்டதன் காரணமாக 2009 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் மூலம் ஆஷிஷ் நெஹ்ரா வுக்கு பதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆனால் இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. அதனால் அந்த அணையில் இருந்து 2011 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட இவரை டெக்கான் சார்ஜர்ஸ் அணி தனது அணிக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டது. இவர் மிக சிறப்பாக செயல்பட்டு அந்த அணிக்காக பலமுறை வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.மேலும் 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பை பெற்றுக் கொடுத்த இவர் அந்த ஆண்டில் அதிகமான ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் திகழ்ந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய பிறகு சிறப்பாக செயல்பட்ட 5 வீரர்கள் 4

அதன்பின் டிரேடிங் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து மீண்டும் டெல்லி கேப்பிடல் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மிக சிறப்பாக செயல்பட்டு அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார்.

4.அம்பத்தி ராயுடு

2010 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரராக தேர்வு செய்யப்பட்ட அம்பத்தி ராயுடு அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக தொடங்கினார் மேலும் அவ்வப்போது விக்கெட் கீப்பிங் செய்து அந்த அணிக்கு மிகப் பெரும் உதவியாக இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை டைட்டில் பட்டத்தை வெல்லும் பொழுது அந்த அணியின் முக்கிய வீரராக செயல்பட்ட அம்பத்தி ராயுடு 2018 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.அன்றிலிருந்து இன்றுவரை சென்னை அணி ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய பிறகு சிறப்பாக செயல்பட்ட 5 வீரர்கள் 5

5.யுவநே்திர சஹால்

2011 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஜகாத் மூன்று ஆண்டுகள் அந்த அணியில் பயணித்தார் ஆனால் இவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் மும்பை இந்தியன்ஸ் அணியில் கொடுக்கப்படவில்லை அதன்பின் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட சஹால் தனது அபார திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு தனி இடத்தை பெங்களூரு அணியில் உறுதி செய்துகொண்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய பிறகு சிறப்பாக செயல்பட்ட 5 வீரர்கள் 6

மேலும் பல முறை பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவிய சஹால் சுழற்பந்து வீச்சில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *