2021 ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் புதிதாக இணைந்திருக்கும் வீரர்களின் பட்டியல் !! 1

தனக்கென தனி ரசிகர் பட்டாளமே உலகெங்கும் வைத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய அணியின் வெற்றிகர முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வருகிறது,

கடந்தாண்டு துபாய் அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி யாரும் எதிர்பாராத வகையில் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது, தோனி தலைமையிலான சென்னை அணியில் சீனியர் வீரர்கள் யாரும் சிறப்பாக செயல்படததன் காரணமாகத்தான் இந்தத் தோல்வி ஏற்பட்டது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்தனர், மேலும் இந்த தோல்வி ரசிகர்களிடத்தில் மிகப்பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

2021 ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் புதிதாக இணைந்திருக்கும் வீரர்களின் பட்டியல் !! 2

இந்நிலையில் 2020 ஐபிஎல் சென்னை அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 2021 ஐபிஎல் போட்டியிலும் தொடர்வார் என்று அதிகாரப்பூர்வமாக அந்த அணி தலைமை அறிவித்தது, இதனைத் தொடர்ந்து 2021 கான ஐபிஎல் போட்டியில் எப்படியாவது அணியை சரி செய்துகொண்டு கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்க இருக்கும் சென்னை அணியில் ஹர்பஜன் சிங் பியூஷ் சாவ்லா போன்ற முன்னணி வீரர்களும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்,மேலும் அந்த அணியின் நட்சத்திர வீரரான ஷேன் வாட்சன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார்.

2021 ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் புதிதாக இணைந்திருக்கும் வீரர்களின் பட்டியல் !! 3

இதன் காரணமாக சென்னை அணி புது வீரர்களை தனது அணியில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டது, கடந்தாண்டு சில சூழல் காரணமாக அணியில் இருந்து விலகிய சுரேஷ் ரெய்னா 2021 கான ஐபிஎல் போட்டி சென்னை அணிக்கு திரும்பியது ரசிகர்களிடத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற 2021 காண ஐபிஎல் போட்டியின் ஏலத்தில்த்தில் சென்னை அணிக்கு தேவைப்படும் வீரர்களை தேர்ந்தெடுத்தது.

கிருஷ்ணப்ப கௌதம் 9.25 கோடி

மொயின் அலி 7 கோடி

சட்டேஸ்வர் புஜாரா 50 லட்சம்

ஹரிசங்கர் ரெட்டி 20 லட்சம்

பகத் வர்மா 20 லட்சம

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *