பயமே இல்லாத தரமான பேட்ஸ்மேன்… இவரை எடுக்கும் அணிக்கு நிச்சயம் ஜாக்பாட் தான்; இர்பான் பதான் சொல்கிறார்
சன்ரைஸ் ஹைதராபாத் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மாயங்க் அஹர்வாலை தேர்ந்தெடுக்க வேண்டும் என இர்ஃபான் பதான் அறிவுரை வழங்கியுள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட மாயங்க் அகர்வால், ஒற்றைய ஆளாக பஞ்சாப் கிங்ஸ் அணியை எப்படியாவது இறுதிச்சுற்றுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று கடுமையாக போராடினார்.
2022ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் பங்கேற்ற மாயங்க் அஹர்வால் 196 ரன்கள் எடுத்திருந்தார்.ரன்கள் குறைவாக இருந்தாலும் பல சமயங்களில் சுயநலமில்லாமல் தனது அணிக்காக விளையாடியிருந்தது அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றது. இருந்த போதும் இவரை 2023 தொடருக்கான தனது அணியிலிருந்து நீக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ள மாயங்க் அஹர்வாலை ஹைதராபாத் அணி தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று பெரும்பாலானோர் தெரிவித்து வருகின்றனர் வருகின்றனர்.
வலை விரிக்கும் ஹைதராபாத் அணி..
அந்த வகையில் கேன் வில்லியம்சனை அணியிலிருந்து நீக்கியதால், கேப்டன் இல்லாமல் தவித்து வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி,சுயநலமில்லாத மாயங் அஹர்வாலை தேர்ந்தெடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ஹைதராபாத் அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து இர்ஃபான் பதான் பேசுகையில்,“ஹைதராபாத் அணிக்கு ஆக்ரோசமாக செயல்படும் துவக்க வீரர் தேவை,இதனால் ஹைதராபாத் அணி மாயங்க் அகர்வாலை தேர்வு செய்யும்,தற்போது ஹைதராபாத் அணியை சிறந்த முறையில் வழிநடத்திய கேன் வில்லியம்சன் இல்லை,இதனால் ஹைதராபாத் அணி மாயங் அஹர்வால் போன்ற ஒரு வீரரை கேப்டனாக்க வேண்டும், மாயங்க் அஹர்வால் அணியை சிறப்பாக வழிநடத்துவார்.மேலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ப்ரீயாக விளையாடுவார். மேலும் பயமில்லாமல் சுயநலமில்லாமல் செயல்படக்கூடிய வீரர். நிச்சயம் இவர் எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக செயல்படக் கூடியவர்” என்று மாயங்க் அஹர்வாலை இர்பான் பதான் பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.