சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெறும் இரண்டு வாரத்தில் தெறித்து ஓடியதற்கு இது தான் காரணம்; ரகசியத்தை வெளியிட்ட அயர்லாந்து வீரர்
சேர்ந்த இரண்டாவது வாரத்திலேயே சிஎஸ்கே அணியிலிருந்து விலகிய காரணம் என்னவென்பதை ஜோஸ் லிட்டில் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2022 உலகக்கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய அயர்லாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் லிட்டில் 7 போட்டிகளில் பங்கேற்று 11 விக்கெட்களை வீழ்த்தி அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார்.
இதனால் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இவரை பாராட்டியுள்ளனர்.
சுத்தமா மதிக்கல..
கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்ட இவர் இரண்டு வாரத்திலேயே அணியில் இருந்து விலகியிருந்தார் ஆனால் அது சம்பந்தமாக எந்த ஒரு காரணமும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தான் 2022 ஐபிஎல் தொடரில் இரண்டு வாரங்களிலேயே சென்னை அணியிலிருந்து விலகினேன் என்ற காரணத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதில், “நான் என்ன எதிர்பார்த்து சென்றேனோ அதுபோன்று அங்கு நடக்கவில்லை, முதலில் நான் நெட் பவுலராக சென்று யாருக்கேனும் காயம் ஏற்பட்டு நமக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு பயிற்சியில் பந்து வீசுவதற்கு கூட வாய்ப்பு அளிக்கவில்லை, வலைப் பயிற்சியின் போது எனக்கு வெறும் இரண்டு ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு ஓவரை வீசுவதற்காக தான் நான் பாதி உலகம் கடந்து வந்தேனா என நினைத்தேன் அல்லது நான் ஏமாளியாக இருந்திருப்பென்.
ஏனென்றால் நான் லங்கா பிரீமியர் லீக், T10 போன்ற தொடர்களில் பங்கேற்று விளையாடியுள்ளேன், மேலும் அந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன், நான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீரர்,அங்கு நடந்தது எனக்கு சரியாக படவில்லை, இது போன்ற சம்பவம் அங்கு இருந்த வேறு சிலருக்கும் நடந்தது, ஆனால் அவர்கள் அந்த அளவிற்கு பரிச்சயமானவர்கள் கிடையாது.நான் அங்கு நெட் பவுலராக சென்றேன்,ஆனால் மற்றவர்கள் சோர்வானல் மட்டும் பந்து வீச பயன்படுத்தபட்டேன், அந்த சமயம் இங்கிருந்து வெளியே போய்விடு என்று சொல்லாமல் சொன்னது போல் இருந்தது, இதன் காரணமாக நான் அங்கிருந்து இரண்டு வாரத்திலேயே சென்று விட்டேன்” என்று ஜோஸ் லிட்டில் தெரிவித்திருந்தார்.