இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களுக்கு அதிக அளவில் பயிற்சியாளர்கள் வாய்ப்பை ஐபிஎல் அணிகள் வழங்க வேண்டும் என முகமது அசாருதீன் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் லீக் 2008-ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் வெளிநாட்டு வீரர்களை அதிக அளவில் ஏலம் எடுக்க விரும்பும் ஐபிஎல் அணிகள், பயிற்சியாளர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்களையும் வெளிநாட்டில் இருந்து ஒப்பந்தம் செய்கிறது.
இந்நிலையில் இந்திய நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அசாருதீன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முகமது அசாருதீன் கூறுகையில் ‘‘ஐபிஎல் அணிகள் கட்டாயம் இந்தியாவின் முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களுடைய அணிகளை வழிநடத்த போதுமான அனுபவங்கள் இருக்கிறது. மொத்தத்தில் இந்திய பிரிமீயர் லீக்கில் அதிகமான பயிற்சியாளர்கள் இடம்பெற வேண்டும்.
நம்முடைய பயிற்சியாளர்கள் பிக் பாஷ் அல்லது ஆஸ்திரேலியாவுக்கு அல்லது இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக முடியாது. இங்கே யாரையும் பயிற்சியாளர்களாக்குவது அணிகளின் தனிச்சிறப்பு. ஆனால், முன்னாள் வீரர்கள் அவர்களுடைய காலத்தில் ஏராளமான சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளனர் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர், வரும் செப்.,19ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டி20 உலகக்கோப்பை தொடரும் ஒத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதால், அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

Photo by: Rahul Gulati /SPORTZPICS for BCCI
அதன்படி, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஐசிசி ஒத்தி வைத்தது. இதையடுத்து, மத்திய அரசின் அனுமதியுடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், போட்டி செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடர், வரும் செப்.,19ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.