ஐ.பி.எல் சூதாட்டம்; முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது காவல்த்துறை
ஐ.பி.எல் தொடரை சூதாட்டம் நடத்தியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட சோனு ஜாலனிடம் இருந்து பல முக்கிய ஆவணங்களை தானே போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடரின் 11வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற தொடரின் துவக்கத்தில் இருந்தே, இந்த தொடரை வைத்து சூதாட்டம் நடத்தியாக பல்வேறு மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டனர். ஒவ்வொரு மாநில போலீஸாரும் தங்களக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனைகளில் ஈடுபட்டதில் மத்திய பிரதேசத்தில் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் சூதாட்டத்திற்கு மூல காரணமாக திகழ்ந்து வந்த சோனு ஜாலன் என்பவனும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தானே போலீஸாரால் கைது செய்யப்பட்டான். அவனிடம் தானே போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சர்வதேச சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு வைத்து கொண்டு ஐ.பி.எல் தொடரை வைத்து சூதாட்டம் நடத்திய சோனு ஜாலனிடம் இருந்து சில முக்கிய ஆவணங்களையும், சூதாட்டம் நடத்தியதற்கான ஆதரங்களையும் தானே போலீஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர்.

டெல்லி – ஹைதராபாத் இடையேயான போட்டியை வைத்து சோனு உள்பட அவனது கூட்டாளிகள் சூதாட்டம் நடத்திய சான்றுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இது கிர்க்கெட் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.