ஐ.பி.எல் தொடர் எப்பொழுது நடக்கும்..? புதிய தகவலை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ
டி20 உலக கோப்பையை நடத்தும் திட்டத்தில் இருப்பதாகவும், இதுவரை தள்ளி வைப்பது குறித்து பேசவில்லை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளதால் ஐபிஎல் நடைபெறுவது சந்தேகம் எனத் தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் 2020 சீசன் மார்ச் 29-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது. முன்னெச்சரிக்கை காரணமாக விளைாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
ஆனால் ஐபிஎல் தொடர் மட்டும் ஏப்ரல் 15-ந்தேதி வரைக்கும் ஒத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திள்ளது. இதனால் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து எப்போது விடுபடும் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்தியாவில் ஏப்ரல் 15-ந்தேதிக்குப்பின் என்ன நிலைமை என்று தெரிந்துவிடும். இதனால் ஐபிஎல் போட்டியின் நிலை குறித்து பிசிசிஐ இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.
அதேவேளையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் விளையாட்டு போட்டிகள் மீண்டும் நடப்பதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறும் சந்தேகம் எனத் தெரிகிறது.
அதேவேளையில் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் 15-ந்தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் தள்ளி வைக்கப்பட்டால் அக்டோபர்-நவம்பரில் ஐபிஎல் போட்டியை நடத்த வாய்ப்புள்ளது என பிசிசிஐ நினைக்கிறது.
ஆனால், ஐசிசி டி20 உலக கோப்பை தொடரை தள்ளி வைக்குமா? என்று தெரியவில்லை. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஐசிசி-யிடம் கேட்டதாகவும், அதற்கு ஐசிசி-யை தற்போது வரை உலக கோப்பையை நடத்தும் திட்டத்தல் உள்ளதாகவும், தள்ளிப்போடுவது குறித்து பேசவில்லை என்றும் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெற வாய்ப்பில்லை என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.