ஐபிஎல் கேப்டன்கள் போட்டோசூட்டில் ரோகித் சர்மா ஏன் இல்லை??.. எழுந்துள்ள புதிய சர்ச்சை! - சரமாரி கேள்விகளுக்கு மும்பை இந்தியன்ஸ் தரப்பு விளக்கம்! 1

ஐபிஎல் தொடர் 31ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில், இன்று அகமதாபாத்தில் ஐபிஎல் கேப்டன்களுக்கான போட்டோசூட் நடத்தப்பட்டது. அதில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை; இது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வருகிற மார்ச் 31ஆம் தேதி துவங்குகிறது. கொரோனா தொற்றுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகள் எப்படி நடத்தப்பட்டதோ அதுபோல இந்த வருடமும் நடத்தப்படுவதால் ஐபிஎல் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஐபிஎல் கேப்டன்கள் போட்டோசூட்டில் ரோகித் சர்மா ஏன் இல்லை??.. எழுந்துள்ள புதிய சர்ச்சை! - சரமாரி கேள்விகளுக்கு மும்பை இந்தியன்ஸ் தரப்பு விளக்கம்! 2

இந்த வருட ஐபிஎல்-இல் சில அணிகளின் கேப்டன்கள் காயம் காரணமாக மொத்தமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளனர். சில அணிகளின் கேப்டன்கள் சர்வதேச போட்டிகள் இருப்பதால் துவக்கத்தில் சில ஐபிஎல் போட்டிகளில் இருக்க மாட்டர் என்று உறுதியானது.

குறிப்பாக டெல்லி அணிக்கு ரிஷப் பன்ட் இல்லாததால், டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார். ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால் நித்திஷ் ரானா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். சர்வதேச போட்டிகள் இருப்பதால் அவரால் துவக்கத்தில் சில ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று தெரியவந்திருக்கிறது. ஆகையால் தற்காலிக கேப்டனாக மற்றொரு மூத்த வீரர் புவனேஸ்வர் குமார் கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார்.

அகமதாபாத்தில் மார்ச் 30ஆம் தேதி அனைத்து ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் மீட்டிங் நடைபெற்றது. பின்னர் ஐபிஎல் கோப்பையுடன் சேர்ந்து போட்டோசூட் நடத்தப்பட்டது. இதற்கான போட்டோக்கள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் இடம்பெறவில்லை. இதனால் பல்வேறு கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பு இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறது.

ஐபிஎல் கேப்டன்கள் போட்டோசூட்டில் ரோகித் சர்மா ஏன் இல்லை??.. எழுந்துள்ள புதிய சர்ச்சை! - சரமாரி கேள்விகளுக்கு மும்பை இந்தியன்ஸ் தரப்பு விளக்கம்! 3

“மார்ச் 29ஆம் தேதி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ரோகித் சர்மா ஈடுபட்ட பிறகு, அவருக்கு உடல்நிலை சரியில்லை. முழு ஓய்வுபெற்று வருகிறார். ஆகையால் அகமதாபாத்திற்கு பயணித்து அனைத்து கேப்டன்கள் போட்டோசூட் மற்றும் மீட்டிங்கில் ரோகித் சர்மாவால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் குணமடைந்து விடுவார். போட்டியிலும் கலந்து கொள்வார்.” என்று அணி நிர்வாகம் அறிவித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசனின் முதல் போட்டி ஏப்ரல் 2ஆம் நடைபெறுகிறது. அதில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. ரோகித் சர்மா அதற்குள் வந்துவிடுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி உறுதியாக கூறியுள்ளதால் ரசிகர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஐபிஎல் கேப்டன்கள் போட்டோசூட்டில் ரோகித் சர்மா ஏன் இல்லை??.. எழுந்துள்ள புதிய சர்ச்சை! - சரமாரி கேள்விகளுக்கு மும்பை இந்தியன்ஸ் தரப்பு விளக்கம்! 4

ஐபிஎல் கேப்டன்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோவில் ரோகித் சர்மா இடம்பெறாததால், சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளும் கிளம்பியதால் சர்ச்சை உருவானது. இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கவே மும்பை இந்தியன்ஸ் அணி இத்தகைய விளக்கத்தை கொடுத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *