ஐ.பி.எல் தொடரின் மறுமுகத்தை தைரியத்துடன் வெளிப்படுத்திய நடன அழகி
இந்தியாவில் ஆண்டு தோறும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரை பிரபலமாக்கியதில் நடன அழகிகள் பங்கு மிக முக்கியமானது. முதல் தொடரில் இந்த தொடரை பற்றி பேசிய ரசிகர்களை விட அரை குறை ஆடையுடன் நடனமாடிய நடன அழகிகள் பற்றி பேசியவர்களே ஏராளம். இதன் மூலம் முதல் தொடரிலேயே ஐ.பி.எல் தொடர் பிரபலமடைந்தது.
முதல் தொடரில் பெரும் சர்ச்சையையே உண்டாக்கிய நடன அழகிகளின் அரைகுறை அடுத்தடுத்த தொடர்களில் ரசிகர்களுக்கும், நமக்கும் பழகி போய்விட்டது என்றாலும் ஒவ்வொரு தொடரின் போதும் நடன அழகிகள் குறித்த ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்து கொண்டே தான் இருக்கிறது.
ஐ.பி.எல் தொடரின் 11வது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரெடிட் என்னும் நடன அழகி ஒருவர் ஐ.பி.எல் தொடர் குறித்து அளித்த பேட்டியை இங்கு ஒரு ரீ கால் செய்வோம்.
கேள்வி; இந்தியாவிலேயே அழகான பெண்கள் நிறைய பேர் இருக்கும் பொழுது உங்களை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்..?
பதில்; எங்களுடன் இந்திய பெண்களும் சேர்ந்து நடனமாடுவதை பார்க்க எனக்கும் ஆசை தான், ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை, ஒருவேளை நான் ராஜினாமா செய்துவிட்டாலும், அந்த இடத்திற்கு வேறு ஒரு வெள்ளைக்கார பெண் தான் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.
கேள்வி; நீங்கள் மைதானத்தில் நடனமாடும் போது ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் உங்கள் மீது தான் இருக்கும்.. ரசிகர்கள் சிலர் அத்துமீறும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்..?
பதில்; நான் அதனை எப்பொழுதும் முழுமையாக வெறுக்கிறேன்.
கேள்வி; நீங்கள் ஊக்கப்படுத்தும் அணியின் பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டை இழந்துவிட்டால் உங்களுக்கு வேலை இருக்காதே, இதற்காக உங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழக்க ரகசியமாக விரும்புவீர்களா..?
பதில்; நிச்சயமாக இல்லை, இது ஒரு பொழுது போக்கான விசயம். இதில் எங்களுக்கு போர் அடிக்கவே செய்யாது.
கேள்வி; ஐ.பி.எல் தொடர் நடைபெறாத சமயத்தில் உங்கள் வேலை என்ன..?
பதில்; பாலிவுட்டில் பின்னணி கலைஞராக வேலை செய்து வருகிறேன்.
கேள்வி; நீங்கள் எந்த அணியின் நடன அழகியாக இருக்கிறீர்கள்..?
பதில்; அதை மட்டும் என்னால் சொல்ல முடியாது, அதை கூறும் அதிகாரம் எனக்கு இல்லை.