ரத்து செய்யப்படும் ஐ.பி.எல் ஸ்பான்ஸர்சிப்..? பி.சி.சி.ஐ., மீண்டும் ஆலோசனை !! 1

ரத்து செய்யப்படும் ஐ.பி.எல் ஸ்பான்ஸர்சிப்..? பி.சி.சி.ஐ., மீண்டும் ஆலோசனை

லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலின் எதிரொலியால் விவோ நிறுவனத்துடனான ஸ்பான்ஷர்சிப் ஒப்பந்தை ரத்து செய்வது குறித்து பி.சி.சி.ஐ., மீண்டும் ஆலோசித்து வருகின்றது.

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு குறிப்பிட்ட ஆண்டுக்கும் ஸ்பான்சர்ஷிப் மாற்றியமைக்கப்படும். அதன்படி, விவோ நிறுவனம் தற்போது ஐபிஎல் தொடரை ஸ்பான்சர் செய்து வருகிறது. எல்லைப் பகுதியில் சீனா அத்துமீறித் தாக்கியதில் இருபதுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இதனால், சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது. பல்வேறு அரசியல் இயக்கங்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தின.

ரத்து செய்யப்படும் ஐ.பி.எல் ஸ்பான்ஸர்சிப்..? பி.சி.சி.ஐ., மீண்டும் ஆலோசனை !! 2

ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இது குறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் விவோ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும், வலுதுசாரி சிந்தனையாளர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த ஒப்பந்தத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை தீவிரமடைந்தது. இந்த பிரச்சனை குறித்துப் பேசுவதற்கு பிசிசிஐ சார்பில் ஏற்பாடு செய்திருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் ஐபிஎல் தொடரின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

விவோ நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பை தடைசெய்ய சட்டப்படி சாத்தியக் கூறுகள் உள்ளதா, இதனால், ஐபிஎல் நிர்வாகத்திற்கு இழப்புகள் எதுவும் ஏற்படுமா என்று ஆலோசிக்க உள்ளனர்.

விவோ நிறுவனம் 2018ஆம் ஆண்டு பிசிசிஐ உடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஒப்பந்தப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை இந்நிறுவனம் ஸ்பான்சர் செய்யும். ஒப்பந்தப்படி, ஒவ்வொரு வருடமும் 440 கோடி ரூபாய் பிசிசிஐக்கு செலுத்தி வருகிறது.

ரத்து செய்யப்படும் ஐ.பி.எல் ஸ்பான்ஸர்சிப்..? பி.சி.சி.ஐ., மீண்டும் ஆலோசனை !! 3

சட்டப்படி போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தால் விவோ நிறுவனம் நீதிமன்றத்தை நாடும். சுமுகமாகப் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி ஆலோசனையின் போது விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பிசிசிஐ நிர்வாகத்தின் பொருளாளர் அருண் துமல் இது குறித்து கூறியதாவது,

“இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சீன நாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. நமது நாட்டின் எல்லைப் பகுதியில் அத்துமீறி நமது ராணுவ வீரர்களைத் தாக்கி கொலை செய்திருப்பதால் நாடே சீனா மீது வெறுப்புடன் இருக்கிறது. இந்நேரத்தில் தாய் நாட்டின் பக்கம் நிற்பது தான் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. பிசிசிஐ நிச்சயம் நம் நாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்” என்று குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *