ஐ.பி.எல். தொடரின் இரவு ஆட்டங்கள் 8 மணிக்குப் பதிலாக 7 மணிக்கு தொடங்க திட்டம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடரில் இரவு ஆட்டங்கள் 8 மணிக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆட்டங்கள் 7 மணிக்கு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் (பிசிசிஐ) நடத்தப்பட்டு வரும் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) டி20 கிரிக்கெட் லீக் உலகளவில பிரபலம் அடைந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் இந்த வருடத்துடன் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.

New Delhi: Siddarth Kaul of Sunrisers Hyderabad celebrates fall of Karun Nair’s wicket during an IPL 2017 match between Sunrisers Hyderabad and Delhi Daredevils at Feroz Shah Kotla in New Delhi on May 2, 2017. (Photo: Surjeet Yadav/IANS)

அடுத்த ஆண்டு 11-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. 11-வது சீசனில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர ஐ.பி.எல். அணி உரிமையாளர்களும், பிசிசிஐ-யும் விரும்புகிறது. அதேவேளையில் ரசிகர்களின் ரசனை குறைந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது.

Krunal Pandya of MI celebrates after takes a wicket of Irfan Pathan of GL during match 35 of the Vivo 2017 Indian Premier League between the Gujarat Lions and the Mumbai Indians held at the Saurashtra Cricket Association Stadium in Rajkot, India on the 29th April 2017
Photo by Rahul Gulati – Sportzpics – IPL

தற்போதைய நிலையில் இரவு ஆட்டங்கள் 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இரவு 12 மணியளவில் முடிவடையும். அதன்பின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லவும், வீரர்களும் ஓட்டல்களுக்குச் செல்லவும் நள்ளிரவு ஒரு மணி முதல் 1.30 மணி வரை ஆகிறது.

Delhi Daredevil captain Zaheer Khan celebrates bowling Ajinkya Rahane of Rising Pune Supergiant first ball of the innings during match 52 of the Vivo 2017 Indian Premier League between the Delhi Daredevils and the Rising Pune Supergiant held at the Feroz Shah Kotla Stadium in Delhi, India on the 12th May 2017
Photo by Shaun Roy – Sportzpics – IPL

இதனால் போட்டியை இரவு 7 மணிக்கு நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த ஆலோசனைகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டால் போட்டி 7 மணிக்கு தொடங்கும்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.