சும்மா சொல்ல கூடாது தீபக் சாஹர் வேற லெவல்; பிளமிங் புகழாரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் எதிர்பார்த்ததை விட தீபக் சாஹர் அபாரமாக பந்துவீசுவதாக சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் நடக்கிறது.
இதில் இரண்டு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, வீரர்கள் ஏலத்துக்கு பின் பெருசுகள் அணி, சீனியர்கள் அணி, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என பலரும் விமர்சித்தனர்.
இருந்தாலும் இதைப்பற்றி கவலைப்படாமல் தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணி, ஐபி எல்., அரங்கில் அசத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீவன் பிளமிங் கூறுகையில்,‘தீபக் சகார் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அசத்தி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தொடர்ச்சியாக 140 முதல் 143 வரை வேகத்தில் பந்தை வீசுவதே அவரின் மிகப்பெரிய பலம். இவர் இந்தளவு செயல்படுவார் என எதிர்பார்க்கவில்லை .’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை அணி மீதான விமர்சனம் குறித்து பதலளித்த பிளமிங், நாங்கள் ஐ.பி.எல் கோப்பையை வெல்வதற்காக இங்கு வந்துள்ளோம், இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை முன்னேற்றுவது எங்கள் வேலை இல்லை, எங்கள் இலக்கு ஐ.பி.எல் கோப்பை ஒன்று மட்டும் தான், அதற்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் நிச்சயம் தேவை என்ற அடிப்படையிலேயே ஒவ்வொரு வீரராக தேர்வு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.