ஐபில் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர், இங்கிலாந்து அணிக்காக 18 மாதங்கள் பின்பு மீண்டும் இடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணிக்காக லீக் இறுதி போட்டியிலும், எலிமினெட்டர் சுற்றிலும் பங்கு பெற முடியவில்லை.
முதல் இரண்டு மூன்று போட்டிகளில் 5வது 6வது வீரராக கலமகிறங்கிய இவர் சிறப்பாக சோபிக்கவில்லை. பின்பு, அஜிங்க்யா ரஹானே அறிவுரைபடி, துவக்க வீரராக களமிறங்கினார்.
எதிரணியை அடிச்சு துவம்சம் செய்தார் என்று தான் கூற வேண்டும். தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசினார். 13 போட்டிகளில் 548 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் இவருக்கே. இவரின் ஸ்ட்ரைக் ரேட் 155 க்கும் மேல்.
இந்த ஃபார்ம் இங்கிலாந்து அணியிலும் தொடர்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளிலும் அரைசதம் விளாசி தொடரை சமன் செய்ய பெரிதும் உதவினார்.
இதுகுறித்து பட்லரிடம் கேட்கையில், ஐபில் தொடர் எனது இந்த ஃபார்ம்க்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம் பெற்ற நான் டெஸ்ட் போட்டிகளில் ஆடாதது வருத்தமளித்தது. இப்போது அது நிறைவேறி உள்ளது. மேலும் சிறப்பாக செயல் பட காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.
இவர் 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பெற்றிருக்கிறார். 20 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள இவர், முன்பிருந்ததை விட அதிக அனுபவம் பெற்றுள்ளதாகவும். அந்த அனுபவம் தொடர்ச்சியாக களத்தில் இருக்க உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.