ஐ.பி.எல் தொடரில் யாராலும் நெருங்க முடியாத நான்கு சாதனைகள் !! 1
ஐபிஎல் போட்டிகளில் இதுவரை முறியடிக்க முடியாத மிகக் கடினமான சாதனைகள்..
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
 கடந்த 12 சீசனாக நடந்த ஐபிஎல் தொடரில் விளையாட்டு வீரர்கள் பல சாதனைகளைப் புரிந்துள்ளனர் அவர்களால் பல முறியடிக்கப்பட்டு உள்ளன இருந்தபோதும் நாலு சாதனைகளை முறியடிக்க மிகக் கடினமான ஒன்றாகவே இந்நாள்வரை திகழ்கிறது
ஐபிஎல் போட்டித் தொடரில் இதுவரை பல விதிமுறைகள் மாறி இருந்த போதும் இந்த சாதனைகளை இதுவரை எவராலும் முறியடிக்க முடியவில்லை.அப்படிப்பட்ட நான்கு முக்கிய சாதனைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
1,அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி..
ஐபிஎல் போட்டி தொடங்கிய காலகட்டத்தில் நடந்த முதல் போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூருக்கு இடையிலான போட்டியாகும். அதில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 222 ரன்கள் அடித்தது. அதில் பிரெண்டன் மக்கலம் மிகச் சிறப்பாக செயல்பட்டு 73 பந்துகளில் 158 ரன்கள் அடித்தார். பின் களமிறங்கிய பெங்களூரு அணி கொல்கத்தா அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 82 ரன்களில் சுருண்டது.இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐபிஎல் போட்டித் தொடரில் இதுவரை முறியடிக்க முடியாத சாதனையாக இதுவரை காணப்படுகிறது.
ஐ.பி.எல் தொடரில் யாராலும் நெருங்க முடியாத நான்கு சாதனைகள் !! 2
2,ஒரு ஓவரில் அதிகமான ரன்கள்.
2011இல் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் கொச்சி டஸ்கர் கேரளா இடையிலான போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடிய அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் அந்த போட்டியின் ஒரு ஓவரில் 37 ரன்கள் எடுத்தார், அதில் நான்கு சிக்ஸ்களும் மற்றும் 3 பவுண்டரிகளை அடித்தார் அதில் ஒரு no-ballஉம் அடங்கும்.
ஐ.பி.எல் தொடரில் யாராலும் நெருங்க முடியாத நான்கு சாதனைகள் !! 3
3,அதிகமான ஸ்கோர்…
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் புனே வாரியர்ஸ் இந்தியா இடையிலான போட்டியில் அதிரடியாக விளையாடிய பெங்களூர் அணியினர் 263 ரன்கள் எடுத்தனர். இதில் அதிரடியாக செயல்பட்ட கிறிஸ் கெயில் 175 ரன்கள் எடுத்தார். இதுவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எடுத்த அதிகப்படியான ஸ்கோர் ஆகும். இதுவரை இந்த சாதனையை எந்த அணியும் முறியடிக்க முடியவில்லை.
ஐ.பி.எல் தொடரில் யாராலும் நெருங்க முடியாத நான்கு சாதனைகள் !! 4
4,தனிநபரின் அதிகமான ஸ்கோர்..
ஐபிஎல் போட்டித் தொடர்களில் அதிகமான சாதனை படைத்தவர் கிறிஸ் கெயில். இந்த சாதனையையும் படைத்த பெருமை கிரிஸ் கெயிலயே சேரும். இவர் புனே வாரியர்ஸ் எதிரான போட்டியில் 175 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 17 சிக்சர்கள் அடங்கும். இது இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படாத ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.
ஐ.பி.எல் தொடரில் யாராலும் நெருங்க முடியாத நான்கு சாதனைகள் !! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *