ஐபிஎல் போட்டி தொடரில் அதிவேகமான சதம் அடித்த 3 வீரர்கள் !! 1

ஐபிஎல் போட்டி தொடரில் அதிவேகமான சதம் அடித்த 3 வீரர்கள். கிரிக்கெட் போட்டித் தொடர்களில் மிகவும் விறுவிறுப்பான போட்டி தொடர் 20 ஓவர் தொடர் ஆகும். ஐபிஎல் போட்டித் தொடர் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.அதில் விளையாட்டு வீரர்களுக்கு எப்பொழுதும் மவுஸ் அதிகமாகவே இருக்கும்.

பேட்ஸ்மேன்கள் அடிக்கும் சதம் மற்றும் அரை சதம் தனது அணியின் ஸ்கோரை உயர்த்துவது மட்டுமல்லாமல் அணிக்கான வெற்றியையும் தீர்மானிப்பதில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

கிறிஸ் கெயில் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs புனே வாரியர்ஸ் இந்தியா April 23,2013).30 பந்துகள்.

ஐபிஎல் போட்டி தொடரில் அதிவேகமான சதம் அடித்த 3 வீரர்கள் !! 2

ஐபிஎல் போட்டி தொடர்களை அதிகமான சாதனை படைத்த வீரர் என்ற பெயரை படைத்தவர் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில்.

இவரின் அதிரடியான ஆட்டம் ரசிகர்களிடத்தில் பெரும் உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இவர் பவுலர்களுக்கு ஒரு சவாலாகவே திகழ்பவர்.இவருக்கு பந்து வீசுவது பவுலர்கள் மிகவும் அச்சப்படுவார்கள் என்றே கூறலாம்.

 

2013 இல் நடந்த ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் கெதிரான போட்டியில் 30 பந்துகளில் இவர் சதத்தை கடந்தார் இதுவே ஐபிஎல் போட்டியில் முறியடிக்க முடியாத ஒரு சாதனையாகத் திகழ்கிறது.

இவர் அந்த போட்டியில் 66 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தார் இதனால் பெங்களூரு அணி 263/5 என்ற எட்ட முடியாத இலக்கை எட்டியது, அந்த போட்டியில் 16 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார். மேலும் 130 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

#2 யூசுப் பதான் (ராஜஸ்தான் ராயல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் march 13,2010)37பந்துகள்.

ஐபிஎல் போட்டி தொடரில் அதிவேகமான சதம் அடித்த 3 வீரர்கள் !! 3

2010ல் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 143 ரன்கள் 53 பந்துகளில் அடித்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் இருந்தது, அப்போது ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய யூசுப் பதான். 11 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார், பின் 37 பந்துகளில் தன் சதத்தை நிர்ணயித்தார்.

இவரின் அபரிவிதமான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி  ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தியது, இருந்தபோதும் 18-வது ஓவரில் பதான் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் முறையில் அவுட்டானார்.

இதனால் ராஜஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

 

#3 டேவிட் மில்லர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் may6,2008)38 பந்துகள்.

ஐபிஎல் போட்டி தொடரில் அதிவேகமான சதம் அடித்த 3 வீரர்கள் !! 4

கிரிக்கெட் போட்டியில் ஒரு சிறிய தவறும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் என்பதற்கு டேவிட் மில்லர் ஒரு எடுத்துக்காட்டு.

2013 இல் நடைபெற்ற பஞ்சாப் மற்றும் பெங்களூருக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது, இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 190 ரன்கள் எடுத்திருந்தது இதனை சேஸ் செய்த பஞ்சாப் அணி முதலில் தடுமாறியது 9.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பின் களமிறங்கிய டேவிட் மில்லர் ஆரம்பத்திலேயே விராட் கோலிக்கு ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். அதை நழுவ விட்டதால் பெங்களூர் அணி மிகப் பெரும் இழப்பை சந்திக்க நேர்ந்தது.

அந்த போட்டியில் டேவிட் மில்லர் 38 பந்துகளில் 100 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் அந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *